பள்ளு இலக்கியம் வரிசைப்படுத்தும் மீன் இனங்கள்

கலாநிதி பால. சிவகடாட்சம்



 
பிரபந்தங்கள் என்று அறியப்படும் சிற்றிலக்கிய வகைகளுள்ளே பள்ளு இலக்கியமும் ஒன்றாகும். ஈழத்திலே தோன்றிய பள்ளு நூல்களுள் கதிரைமலைப் பள்ளு, ஞானப்பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு, ஆகிய நான்கையும் இன்று காணமுடிகின்றது.

பண்ணையார் என்று அழைக்கப்பெற்ற நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான வயல்களில் வேலையாட்களாக உழவுத்தொழில் செய்தோரே பள்ளர் என்று அறியப்பட்டனர். நெல் விளைவதற்குத் தேவையான நீர்தேங்கி நிற்கக்கூடிய பள்ளக்காணிகளில் உழுதொழில் புரிந்த மருதநில மக்கள் இப்பெயருக்கு உரியவர்களாயினர். நெற்பயிர் விளைவிக்கக்கூடிய பருவகாலத்தில் உழுதொழில் செய்வோர் மேற்கொள்ளும் உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், நெல் அறுவடைசெய்தல் ஆகிய முக்கியமான பணிகளை விளக்குவனவாக இப்பள்ளு இலக்கியங்கள் அமைந்துள்ளன.

மழை வருவதற்கான அறிகுறிகள், மழை பொழிதல், ஆற்றில் வெள்ளம் பாய்தல் பண்ணையில் வேளாண்மை தொடங்கல் என்பவற்றோடு இரண்டு மனைவிமாரை உடைய உழவுத்தொழிலாளி ஒருவனின் குடும்பப் பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாகப் பள்ளு நூல்கள் ஆக்கப்பட்டுள்ளன.
'உழவுத் தொழிலுக்கு நீர் அவசியமாதலின், அதனைச் சிறப்பித்துச் கூறுவதற்காகவே, ஆற்றுவெள்ளம் பாய்வதைக் குறிப்பிட வேண்டிய தேவை பள்ளு நூலாசிரியர்களுக்கு ஏற்பட்டதெனக் கொள்வது பொருத்தமானது' என்கிறார் பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள்.

மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகும்போது, அவ்வாற்று வெள்ளம் குறிஞ்சிஇ பாலை. முல்லை. மருதம் நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களின் ஊடாகவும் பாய்வதாகப் பள்ளு நூல்கள் வருணிக்கின்றன.



தாழ்ந்து மிகுந்து மருதங் கடந்து
தழைக்கு நெய்தல் புகுந்ததே

புகுந்து தாழை வனத்தைக் குறுகிப்
பொடித்து மடித்து விருப்புடன்
போதை வீசித் தங்கு மறலிற்
புரியுந் திடரைச் சருவியே

பகிர்ந்து மகிழ்ந்து பரந்து நிறைந்து
பாரக் கடலிற் சேரவே
பரவிப் பரவர் வலையுங் கயிறும்
பாயும் பாதைத் தொகுதியும்

மிகுந்த கலமும் மரமும் பாயும்
வீச்சு வலையும் வீசிமேல்
மிதக்கும் புணையும் தூண்டிற் கயிறும்
வேண்டும் பவளக் கொடிகளும்

முகுந்தன் அனந்த சயனம் பயிலு
மூரிக் கடலைத் தாவியே
முடுகித் திரையிற் கரையிற் படிந்து
முதிரும் வெள்ளம் பாய்ந்ததே

மருத நிலத்தைக் கடந்து நெய்தல் நிலத்துள் புகுந்த ஆற்றுவெள்ளம் நெய்தல் நிலத்தின் அடையாளச் சின்னங்களான தாழைக்காடு, பரதவர் வலைஇ கயிறுஇ வீச்சு வலைஇ மிதக்கும் மரக்கலம், தூண்டிற் கயிறுஇ பவளக் கொடிகள் என்பவற்றை அடித்துப்புரட்டிக்கொண்டு கடலை அடைகின்றதாம்.
ஆற்றுவெள்ளம் கடலுடன் சேரும் இடத்தில் ஆற்று மீன்களுடன் கடல் மீன்களும் சேர்ந்து குதித்துப் பாய்கின்றனவாம். அவ்வாறு பாயும் மீன்களின் பெயர்களை வரிசைப்படுத்துகின்றார்கள் இப்பள்ளு நூல்களின் ஆசிரியர்கள்.
ஈழத்துப் பள்ளு நூல்களில் தரப்பட்டுள்ள மீன்களின் பெயர்களுட் பெரும்பாலானவை இன்றும் வழக்கில் இருப்பதைக் காணலாம். இப்பெயர்கள் சுட்டும் மீன்கள் அனைத்தையும் அறிந்துகொள்வதன்மூலம் அப்பெயர்கள் வழக்கிலிருந்து மறைந்துவிடாமலும் பார்த்துக்கொள்ளலாம்.  

 

குறவி வாளை உளுவை மயிந்தன்

         குப்புளாவுடன் திருக்கைமீன்

கொழுத்த மடவை தொகுத்த கீளி

         குமிளா மாசி செங்கண்ணன்

உறு கிழாத்தி காலை பாலை

         ஓங்கு திரளி வச்சிரம்

உடகத்துடன் குடை செப்பலி

          உற்ற நெடுவால் ஊடகம்

பறவை உறவி குளக்கன் தோகை

          பருந்து வாயன் மட்டிமீன்

பாரக் கெண்டை தடியன் சீலா

          பாரக் கத்தலை ஆரல்மீன்

கறுவிக் கரையில் வழைகள் ஒதுக்கிக்

          கதித்துக் குதித்துப் பாயவே

கங்கையாறு பெருகி வாற

          காட்சி பாரும் பள்ளீரே

 

தாவு கெளிறு வரால் ஆரல்

          தருவெள் ளாரல் தும்பையன்

சாலு மாம்பழக் கெளிறு சின்னத்

         தரளங் கறுத்த கெளிற்றுமீன்

வாவு கருங்கண் வாளை பவள

         வாளை மூக்கன்  வாளைகோ

வஞ்சி கடியன் பொதியன் கெளிறு

         வவ்வால் வெள்ளை வவ்வால்மீன்

ஓவி நெடிய வாயன் மடவை

          உரிய மணலைக் கூரலோடு

ஓடும் பூனைக் கண் கெளிறு வயலின்

          உதிக்கும் காணி யாளனும்

பூவிற்றடத்தில் வயலிற் பாய

         புறத்து பாயப் பாயவே

பொருது மாவலி கங்கை வார

         புதுமை பாரும் பள்ளீரே 

                                               - பறாளை விநாயகர் பள்ளு

 

 

குண்டத் திருக்கை பறவை தரளம்

            கொடுவா லுழவை கும்பிளா

குறவை பிறையன் காரை மணலை

            குழு முரல் கடல் மறி மண்ணா

தொண்டை மடவை காரை பாரை

          சுறவு வாளை கடல்வரால்

சுரும்பு நெத்தலி கெத்தலி கத்தலை

          தும்பை ஓரா வஞ்சூரன்

கெண்டை திரளி சள்ளை வெள்ளை

           கீழி காலை பாலைமீன்

கெளிறு மலங்கு நலங்கு புனலிற்

         கீழுலாவு றால் முறால்

மண்டிக்குதித்துக் கடலின் மீன்களும்

          வாவிக்கழியின் மீன்களும்

மதத்துச் சினத்துக் குதித்துப் பாயும்

           வளமை பாரும் பள்ளிரே 

                                            - கதிரைமலைப் பள்ளு

 

கோலச் சுறவு நீலப் பறவை

       கெண்டை திருக்கை தொண்டை மீன்

கூரா மணலை ஓரா நகரை

       கும்பிளாச் சிறு தும்பை மீன்

வாலைத் திரளி சீலப்புரளி

       வஞ்சூரன் நெடும் பஞ்சூரன்

வடவை துடவை கத்தலி நெத்தலி

       வாளை மகரந் தாழை மீன்

ஓலைச் சிறையன் மாலைப் பிறையன்

       ஊடகம் சிறு சூடகம்

உல்லான் பாலை குறவை வறவை

       ஓங்கில் மகரந் தாங்கில் மீன்                      

சீலக் கயல்கள் விரும்புஞ் சுரும்புஞ்

       சீலா மயந்தன் ஆலா மீன்

செழித்துக் களித்துக் குதித்துப்

       பாயுஞ் சிங்காரம் பாரும் பள்ளீரே   
 

- தண்டிகைக் கனகராயன் பள்ளு



அயிலை மீன்  Indian mackerel


அயிரை மீன் common spiny loach

 

ஆரல்மீன் (விலாங்குமீன்)  Eel 

 

 

உளுவை மீன் green sawfish 

 

 

ஒட்டி மீன்   rabbit fish 

 

 

ஓரா மீன்   java rabbit fish        

 

 

கடல்வரால் black kingfish 

 

 

கயல் மீன்  grey mullet 

 


 

கலவாய் மீன் (Indian grouper fish) 

 

 

காரை (காரல் மீன்)  Pony fish 

 


 

கிளக்கன்     Whiting 

 

 

 கும்பிளா பாரை blue runner 

 

 

 

கெளிறு (கெழுத்தி)  catfish,      

 

 

  

கொடுவா Barramundi / sea bass

 

 

  

சீலா   Barracuda

 

 

 

சுறவு (சுறா) milk shark

 

 

 

சூரை  tuna

 

 

 

 

சூடை (சூடன்)  sardine

 

 

 

திரளி   sea bream

 

 

திருக்கைமீன் whip-tail sting ray

 

 

 

 

நகரை (நவரை) Indian goat fish 

 

 

 

 

நெத்தலி Anchovies/Anchovy

 

 

பாலைமீன்  Chanos chanos

 

 

மணலை   Mullet

 

 

 

  

முரல் pipe fish / needle fish

 

 

 

 

வரால்   murrel

 

 

 

 

வச்சிரம் வஞ்சிரம் (அறக்குளா)

seer fish / king fish         

 

 

 

 

வ(வ்)வால் மீன்   pomfret

 

 

 

 

வாளை மீன்   Ribbon fish

 

 

 

 

விளைமீன் Emperor fish 

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்