பயணம்

 

தயாரிப்பு: பிரகாஷ்ராஜ்

இயக்கம்:  ராதா மோகன்


திரைவிமர்சனம் - கவிஞர் இரா .இரவி

தீவிரவாதிகள்சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தை கடத்தி திருப்தியில் இறக்குகின்றனர் . தங்கள் தலைவனை விடுவிக்க வேண்டும் . 1000கோடி ரூபாய் பணம் வேண்டும் .என்று சொல்லி விமானத்தில் பயணம் சென்றவர்களை பணயக் கைதியாக்குகின்றனர் படம் விறுவிறுப்பாக உள்ளது . விமானத்தில் பயணம் செய்பவர்களில் மேஜர் ,டாக்டர் .நடிகர் , சோதிடர் ,பாதிரியார் ,அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாகிஸ்தான் சிறுமி பாத்திரம் ,தாய்.தந்தை இப்படி பலரும் உள்ளனர் .

விமானத்தில் பிரபல நடிகரின் அருகில் அமர்ந்து இருக்கும் ரசிகன் கேட்கும் கேள்விகள் நல்ல நகைச்சுவை .சிந்திக்கவும் வைக்கின்றது .திரைத்துறையின் போலி அவலத்தை நன்றாக கிண்டல் செய்து உள்ளார்இயக்குனர் ராதா மோகன்.

நடிகர் படத்தில் பேசிய பஞ்ச் வசனங்கள் நல்ல சிரிப்பு.
ரத்தத்தில் பல குருப் இருக்கலாம் ஆனால் மக்கள் ஒரே குருபாக இருக்க வேண்டும் . எங்க அம்மாவிற்கு ஒன்று என்றால் ஆம்புலன்சை அழைப்பேன் .நாட்டுக்கு ஒன்று என்றால் நானே ஓடி வருவேன் .
இப்படி பல வசனங்கள் பேசிய நடிகர் .சண்டைக் காட்சிக்கு 100 நடிகர்கள் போடுங்கள் என்றவர் ,விமானத்தில் கரப்பான் பூச்சியைப் பார்த்து பயப் படுவது நல்ல நகைச்சுவை.
விமானக் கடத்தல் காட்சி இவ்வளவு நுட்பமாக எந்தத் தமிழ் திரைப்படத்திலும் காட்டவில்லை என்று அறுதியிட்டு சொல்லலாம் ..உண்மையான விமானத்தில், விமான நிலையத்தில் படமாக்கி பிரமிப்பில் ஆழ்த்தி விட்டனர் .

நடிகர் நாகர்ஜுன் ,பிரகாஷ் ராஜ் , ரிசி தலைவாசல் விஜய் என்று பலரும் மிக சிறப்பாக நடித்து உள்ளனர் .அபியும் நானும் என்ற மிக சிறந்த படத்தைத் தந்த ராதா மோகன் மிக சிறப்பாக இந்தப் படத்தையும் இயக்கி தனி முத்திரைப் பதித்து உள்ளார் .

முஸ்லிம் என்றாலே தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் என்றாலேமுஸ்லிம்
என்று காட்டும்தமிழ்த் திரைப்பட வியாதியை ராதா மோகனிடம் எதிர்பார்க்கவில்ல்லை.

ஆபாச குத்துப் பாட்டு ,இரட்டை அர்த்த வசனம் வழக்கமான தமிழ் சினிமா மசாலா இன்றி குடும்பத்துடன் பார்க்கும் படமாக உள்ளது . பாராட்டுக்கள் .

காஸ்மீரில் நடக்கும் தாக்குதல் காட்சி சிறப்பாக உள்ளது .வசனம் மிக நன்றாக உள்ளது . பாபர் மசூதி இடிப்பின் காரணமாகவே நாட்டில் வன்முறை தொடர்கின்றது என்பது உண்மை . படத்தில் இது போன்ற வசனம் தணிக்கை செய்துள்ளது தெரிகின்றது.படத்தின் முடிவுக் காட்சி நல்ல பரபரப்பு . தமிழில் புதிய முயற்சி .





eraeravik@gmail.com