வணிகப் பரிசிலன் அல்லன்

ப.இரமேஷ்


ங்ககாலம் ஒரு பொற்காலம் என்று முழுக்கமிட்டுக் கொள்வதற்கு ஆதாரமாகத் திகழ்வது, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களே. அக்காலப்புலவர்கள் தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காக மட்டும் எழுதப்பட்டபாடல்களாக அவற்றை நாம் கருத முடியாது, ஏனென்றால் அப்பாடல்களில் புலவர்களின் தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்வும் வெளிப்படுகிறது.

சங்கத் தமிழ் மூன்றும் தா| என்று ஒளவையார் இறைவனிடம் வேண்டுவதிலிருந்து அவரின் தமிழ்ப்பற்றை உணரமுடிகிறது. சங்க காலப்புலவர்கள் புலமைத் திறனும், மன்னர்கள் மீது அன்பு செலுத்தும் பண்பும் கொண்டிருந்தனர் இருந்தாலும், அவர்களிடம் புலமைக்கேற்ற செருக்கும் இருந்ததை புறநானூற்றுப் பரிசில் துறைப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஒரு சமயம் அதியமானைப் பெருஞ்சித்திரனார் காணச் சென்றார், ஆனால் அவன் இவரது வரிசைக்கேற்ற பரிசிலை இவரைப் பார்க்காமல் வேலைக்காரனிடம் கொடுத்து அனுப்பினான், பரிசில் வரக்கண்ட பெருஞ்சித்திரனார் மிகவும் வருத்தமுற்று அறிவும் அதற்கேற்ற கொடையும் அழகுறக் கொண்ட இந்த அதியமான் என்னைக் காணாது நல்கும் பரிசிலை யான் ஏற்கமாட்டேன்| என்கிறார். மேலும் குன்றுகளையும்மலைகளையும் கடந்து நெடுவழி நடந்து வந்தது பரிசில் ஒன்றையே கருதி என்று எண்ணி, என்னைக் கண்ணால் காணாமல் வழங்கும் பரிசிலைப் பெறுவதற்கு யான் ஒரு வணிகப் பரிசிலன் அல்லன்,

'பேணித் திணையனைத் தாயினும் இனிதவர்
துணையளவறிந்து நல்கினார் விடினே'
(புறம்-
208)

என்னை விரும்பி எதிர்கொண்டு என் புலமைத் திறத்தைக் கண்டு பின் எனக்கு நல்கும் பரிசில் மிகச் சிறியதாயினும் எனக்கு அது மிக்க இன்பந்தரும் அதுவே அறமாகும், என்று குறிப்பிடுகிறார் இதன் மூலம் மன்னர்கள் புலவர்களின் வரிசை அறிந்து அவர்களது புலமையை நன்கு உணர்ந்து பரிசில் வழங்க வேண்டும் என்று எண்ணினார்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

மூவன் பரிசில் தரத்தயங்கியபோது பெருந்தலைச் சாத்தனார் அவனிடம்,

'ஈயாயாயினும் இரங்குவேனல்லேன்
நோயிலை யாகுமதி
(புறம்-
209)

என்று குறிப்பிடுகிறார். மேலும் கடியநெடுவேட்டுவன் பரிசில் கொடுக்காதபோது அவனிடம் 'நிறைந்த செல்வமுடைய வேந்தர்களானாலும் எம்மை மதிக்காமல் கொடுப்பதை நாங்கள் விரும்பமாட்டோம், நோயில்லாமல் நீ இருப்பாயாக என்று வாழ்த்துகிறார்.

'இன்மையின் இன்னாத யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது'
(குறள்-
1041)

வறுமையை விடத் துன்பம் தருவது வேறொன்றும் இல்லை, அத்தகைய துன்பம் வந்த போதும் புலவர்கள் தங்கள் நிலையில் இருந்து இறங்கி இரக்கமாட்டார்கள். இது புலவர்களின் வறுமையில் செம்மைக் குணத்தைக் காட்டுகிறது. மன்னர்கள் பரிசில் தராவிட்டாலும், அவர்களை வாழ்த்திப் பாடுவது புலவர்களின் இயல்பில் ஒன்றாக இருப்பதை நாம் உணரமுடிகிறது.

'மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
(குறள்-969)

எந்த நிலையிலும் தன்மானத்தை இழக்காதவர்கள் புலவர்கள் என்பதைப் புறம்
207-ல் காணமுடிகிறது. பெருஞ்சித்திரனார் வெளிமான் வீட்டிற்குப் போனபோது, அவன் துஞ்சும் காலையில் இருந்ததனால், தன் தம்பியிடம் இவர்க்கு வேண்டியப் பரிசிலைத் தருக என்று கூறினான். ஆனால் அவன் தம்பி ஈயா மனம் கொண்டவன். பெருஞ்சித்திரனார் வந்திருப்பதை முன்பே அறிந்திருந்து அறியாதான் போல் அவரைப் பார்த்தான், அப்பார்வையில் மலர்ச்சி இல்லை.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
(குறள்-90)

அனிச்சம் பூ முகர்ந்தாலே வாடிவிடும், விருந்தினரோ விருந்தளிப்பவரின் முகம் வேறுபட்டுத் தோன்றினாலே வாடுவர். அதைப்போல அவருடைய மனமும் வாட்டமுற்றது, அவன் கொடுத்த சிறிது பொருளை வாங்காமல்

'அறிவிலா மடவோனை யிரந்தது குற்றம்
என்று எண்ணி எழுந்திரு நெஞ்சே போவோம்
வரிசையோர்க்கு
பெரிதே உலகம் பேணுநர் பலரே'
(புறம்-
207)

என்று தன் நெஞ்சுக்கு கூறி தன்மானமே பெரிது என்று புறப்பட்டார்.



rkavithaxeroxspkoil@gmail.com