சேக்கிழாரின் செய்யுள் மாட்சி

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ

முன்னுரை
காவியங்கள் பல திறத்தன, அவைகளில் சிலவற்றில் உலகைக் காணலாம்ளூ சிலவற்றில் உயிரைக் காணலாம்; சிலவற்றில் கடவுளைக் காணலாம். இம்மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியங்கள் மிகச் சில அவற்றுள் பெரியபுராணம் ஒன்று. பெரியபுராணம் ஓர் அன்புக் கடல். தமழின்பமும் அன்போடியைந்த தொண்டு வாழ்வும் யாண்டும் பொலிகின்றன.

அடியவர் வரலாற்றை விளக்கும் அற்புதமான நூலைச் சைவ சமயத்திற்கு வழங்கியவர் சேக்கிழார். இறைத்தொண்டு ஆற்றிய
63 நாயன்மார்கள் மற்றும் ஒன்பது தொகையடியார்களைப் பற்றிய விரிவான நூல.; நாட்டின் பல இடங்களுக்கும் சென்று எளிமையாக நாயன்மார்களைப் பற்றிய பல தகவல்களைச் சேக்கிழாரால் சேகரிக்கமுடிந்தது. அரிதின் முயன்று சேக்கிழார் சேகரித்த தகவல்கள், மெய்ம்மையும் நம்பகத்தன்மையும் கொண்டவை. அதனால், பெரியபுராணம் மிகச் சிறந்த வரலாற்று நூலாகப் போற்றத்தக்க நிலையை அடைந்தது.

சொல்லழகும், பொருட்செறிவும்
பெரியபுராணம் ஏதோ, பக்தர்கள் மட்டுமே பழத்து அனுபவிக்க வேண்டிய நூல் மட்டுமல்லளூ சமூதாயத்தை வாழ்விப்பதற்காகவும், உலகத்திலுள்ள மக்களனைவரும் ஒரே குறிக்கோளோடு மக்கள் தொண்டு செய்து வாழவேண்டுமென்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவும் உருவான ஒரு காப்பியம் என்றால் அது மிகையல்ல. சொல்லாட்சி, ஓசைநயம், கற்பனை, வர்ணனை, உவமையழகு, காவியச்சுவை, பொருட்செறிவு, தொண்டர்தம் பெருமை, அற்புத நிகழ்வுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு காலக்கருவூலம். அதனால்தான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் அவரை, பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவ என்று போற்றுகிறார். உலகெலாம் என்று தொடங்கி உலகெலாம் என்று முடியும் இந்நூல் எல்லா உலகுக்கும் உரியது என்பதைக் காட்டும் குறிப்பாகும். மேலும், மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தாம் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழில் சோறு மணக்கு மடங்களெலாம் என்று கூறிக் குன்றத்தூராரைப் புகழுகின்றார்.

இறைவனது பேரருட்திறங்களையும், அவனை வழிபட்டுய்யும் முறைகளையும் எடுத்தியம்பும் செய்யுட்களிளெல்லாம் காவியச்சுவையும், சொல்லழகும் பொருட்செறிவும் மிளிர்ந்து செந்தமிழ்த் தெய்வப் பாடல்களே குன்றைப்பதியிலே என்றும் பயிலப்பொறுவன என்பதைச் சொல்கிறது.

புலமைத் திறம்:
துமிழகத்திலுள்ள மூன்று நாடுகளுள் மிகவும் செழியது சோணாடு. ஆந்நாட்டைக்காவிரி என்றும் வளஞசெய்த வண்ணமாய் இருக்கின்றது. காவிரி பலமுகங்கொண்டு கால்வாய்கள் வழியே ஓடிப் பாய்ந்து சோழநாட்டை நீரால் நிரப்பலால் அந்நாட்டிற்கு நீர்நாடு (புனல்நாடு என்றொரு பெயரும் உண்டு. இக்காவிரியைப் புனைந்துரைக்கும் செய்யுட்களில் ஒன்று.

''வம்பு உலாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை யெண்ணில் சிவாலயத்
தெம்பி ரானை யிறையஞ்சலி னீர்ம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரு மொக்குமால்''.

                                 பெரியபுராணம் செய்யுள்
57.

காவிரியானது இருகரையிலுமுள்ள சிவாலயங்களில் எழுந்தருளியிருக்கும் பெருமானை மலராலும நீராலும் வழிபட்டு வணங்குகிறதாம். இட்டுக் கொள்வன பூவுள நீருள என்றபடி அருச்சித்தற்கு இன்றியமையாதனவாகிய மலரும் நீரும் கொண்டே காவிரியும் வழிபடுகிறது என்பதை மேற்கண்ட செய்யுளின் வழி அறிகிறோம்.

திருவாரூர்ச் சிறப்பு:
திருநாட்டு, திருநகரச் சிறப்பைப் பேசும் சேக்கிழார், இம்மை மறுமை இன்பங்களையும், என்றும் அழியாத பேரின்ப வாழ்வையும் வரையாது வழங்கும் வள்ளற் தலைவராகிய தியாசேகப் பெருமானின் அரசு வீற்றிருக்கும் திருவாரூரில் கிளிகளெல்லாம் திருப்பதிகங்கள் பாடுதலையும், நாகணவாய்ப் பறவையெல்லாம் அவற்றைக் கேட்டுக்கொண்டிருத்தலையும் கண்டு கல்நெஞசமும் கரைந்துருகும் என்கிறார்.

''உள்ளம் ஆர்உருகாதவன் ஊர்விடை
வுள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம்
தௌ;ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்''.

                                     செய்யுள் -
90

திருவாரூர் நகரமெங்கும் வேதமந்திரங்களின் ஓகையும், இன்னிசைக்கருவிகளின் இன்னமுத ஓசையும், மாதர்கள் ஆடுகின்ற போது முழங்கும் இடைமணியோசையும், மாடமாளிகைகளிலும் கூடசாலைகளிலும்,மண்டபங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாங்கை, சேக்கிழார் நேர்த்தியாக வர்ணித்துள்ளார்.

''வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணிமுழ வோசையும்
கீதஓசை யுமாய்க் கிளர்ந்தவாறே''.

                                   செய்யுள் -
87

''மாடமாளிகை, சூளிகை, மண்டபம்
கூட சாலைகள், கோபுரம், தெற்றிகள்
நீடுசாளர நீடரங்கு எங்கணும்
ஆடல் மார் அணி சிலம்பு ஆர்ப்பன''.

நால்வகை நிலங்களை வர்ணித்துப் பாடும் சேக்கிழார் முல்லை நிலத்தை பாடும்பொழுது,

''மங்கை யர்க்குவாள் விழிய்pணை தோற்றமான் குலங்கள் எங்கும்;
மற்றவர் இடைக்கிடை மலர்க்கொடி எங்கும்; தங்கள் முல்லையின்
தெய்வம்என்றுஅருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்தொழும்
சிவன்மகிழ் திருமுல்லை வாயில்''

                                    செய்யுள் -
1100

சோழநாட்டிலே வாழ்ந்திருந்த மக்களெல்லாம் எத்தகு சிறந்தவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட பாடலிலே விளக்குகிறார்.

''வீதிகள் விழவின் ஆர்ப்பும், விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா; தனையரும மனையில் தப்பார்
நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளும் மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும் ''.

                                                   செய்யுள் -
84

இவர் அமைச்சுத் தொழில் செய்த, சோழரின் இரண்டாம் தலைநகரம கருவூரைப் பற்றிப் (கரூர்) பாடும்போது, மிஞ்சிய கற்பனையோடும, எழில் நலத்தோடும் இலக்கிய நயத்தோடும் பாடுகிறார்.

''மாமதில் மஞ்சு சூழும்; மாளிகை நிறைவின் சூழும்
தூமணி வாயில் சூழும்; சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்; சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும்; சதமகன் நகரம் தாழ்''.

''கடகரி துறையி லாடும்; களிமயில் புறவிலாடும்
சுடர்மணி அரங்கி லாடும்; அரிவையர் குழல் வண்டாடும்
படரொளி மறுகி லாடும்; பயில்கொடி கதிர் மீதாடும்
தடநெடும் புவிகொண்டாடும தனிநகர் வளமை ஈதால்''.


சேரர் தலைநகராகிய் டிகாடுங்கோளுரை வர்ணிக்கும சேக்கிழார் ஒலி,ஒலியென ஒலிக்குறிப்பினாலேயே,

காலை எழும்பல் கலையினொலி
   கனிற்றுக் கன்று வடிக்குமொலி
சோலை எழுமென் சுரும்பினொலி
   துரகச் செருக்காற் சுலவுமொலி
புhலை விபஞ்சி பயிலுமொலி
   பாடல் ஆடல் முழவினொலி
வேலை ஓலியை விழுங்கி எழ
   வுpளங்கி ஓங்கும் வியப்பினதாய்

                           -என்று அழகொழுகப் பேசுகிறார்.


அன்பும் தொண்டும்:
சேக்கிழார் செய்யுட்களிலே, அடியார்களின் வாழ்க்கையின் அடித்தளத்தில் நிற்பது அன்பும் தொண்டும் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார். வுள்ளுவப் பேராசான் கூறியது போல

அன்புற் றமர்நத வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.

                               குறள் -
75

உலகத்தில் இன்பமுடன் வாழ்கின்றவர்களின் சிறப்பு என்பது, பிறர் மீது அன்பு செலுத்திப் பொருந்தி வாழும் வாழ்க்கையே என்கிறார். புரிபாடல் என்ற சங்கப்பாடல், இறைவனிடம் ஓர் அடிய்hர் வேண்டிக் கொள்வதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

''................... யா அம் இரப்பவை
பொருளும், பொன்னும், போகமுமல்ல, நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலி தாரோயே'',


என்று தேவாரங்கள் பலவற்றிலும் தொண்டர்தம் பெருமையைப் பேசியுள்ளார்..

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்:

அடியார்கள் அனைவருமே, மக்கள் தொண்டை முதன்மையாகக் கொண்டவர்கள். மக்களுக்கு உணவளித்தல துணி தருதல் இன்ன பிற தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவு செய்துள்ளனர். பல அடியார்கள் பசிததவர்களுக்குச் சோறிடுவதையே பெரிய் அறமாகச் செய்து வந்தனர் என்பதைச் சேக்கிழாரின் செய்யுள் வாயிலாக அறிகிறோம்.

எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே  என்பார் ஒளவையார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார். வறுமையும் பசியும் தாண்டவமாடிய தண்னுடைய காலத்தில் அணையா அடுப்பை ஏற்றி ஆயிரமாயிரம பேருக்குச் சோறிட்டார்.

இந்தச் சோறிடும் தொண்டிலே தலைநின்றவர் இளையான்குழ மாறன் என்பவர். அவர் சோறிட்ட முறையைச் சேக்கிழார் செந்தமிழ்ச் சுவையோடு சொல்கிறார்.

''கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விள்ககியே
மண்டுகாதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனைசெய்தபின்
உண்டி நாலுவிதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா
அண்டரநாயகர் தொண்டரஇச்சையிலஅமுதுசெய்ய அளித்துளார்''

                                             செய்யுள் -
443

தம்மைக் கண்டவர்க்கு அவர் யாராயினும், பசியோடு வருவோர்க்கு உணவ அளித்துத் தொண்டு செய்த இன்னொருவர் அமர்நீதி நாயனார். அவர்

''கண்டவர்க்கு உறு காதலின் மனம்கரைந்து உருகத்
தொண்டர் அன்புஎனும் தூநெறி வெளிப்படுப்பா ராய்த்
தண்டின் மீதுஇரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்துஅமர் நீதியார் திருமடம் குறுக''.

                                             செய்யுள் -
510

முடிவுரை:
இவ்வாறு சேக்கிழாரின் செய்யுட்களில் அன்பும் தொண்டும், தமிழும் சைவமும், மாட்சிமை புரிகின்றன. இந்த செய்புட்கடலில் இன்னும் எத்தனையோ முத்துகள் இருக்கின்றன. காலந்தோறும், நம்முடைய தமிழ் மக்கள் பெரியபுராணத்தைப் படித்து அதிலுள்ள செய்யுள் நயங்களை நினைந்து நினைந்து, மகிந்து மகிந்து, மாந்திக் களிக்க வேண்டுகிறோம்.




worldnath_131149@yahoo.co.in