பசங்க 

திரைவிமர்சனம் ( கவிஞர் இரா.இரவி)

சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தை தயாரித்து ஆடம்பரமின்றி எளிமையாகவெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குநர் ஆ.சசிகுமாரின் நிறுவனமானகம்பெனி புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள சிறந்த படம் பசங்க. தமிழ்த் திரையுலகம் ஒருபக்கம் கதையின்றி நடிகைகளின் சதையை நம்பி படம் எடுத்து வருகின்றது. மறுபக்கம்அத்தி பூத்தாற் போல சில நல்ல படங்களும் வருகின்றன. நல்ல படங்கள் வரிசையில்பசங்க படமும் இடம்பெற்றுள்ளது. இது போன்ற படங்கள் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் திரையுலகம் ஆரோக்கியமான பாதையில் திரும்பும்.

படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நம் வீட்டில் பக்கத்து வீட்டில்நடக்கும் நிகழ்வை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றது. அட்டகாசமாக நடித்துள்ளஅல்ல அல்ல வாழ்ந்துள்ள பசங்களை பாராட்டியே தீர வேண்டும். இயக்குநர்திரு.பாண்டியராஜ் பசங்களிடம் நன்கு வேலை வாங்கி உள்ளார். நம் வீட்டில் நம்குழந்தைகள் செய்த குறும்புகள் நம் நினைவுக்கு வந்து விடுகின்றன. சினிமா என்பதுமிகப்பெரிய ஊடகம். மக்களிடையே நல்லதையும் கெட்டதையும் விதைக்கும். ஆனால் இந்தபடத்தில் ஆபாசக் காட்சி எதுவுமில்லை. அதற்காகவே இயக்குநரையும், துணிவுடன்படத்தைத் தயாரித்த திரு.ஆ.சசிக்குமாரையும் பாராட்ட வேண்டும் நச்சுக்கருத்துஎதுவுமில்லை.

சக மனிதனை பாராட்ட வேண்டும். பாராட்ட காசு, பணம் தேவை இல்லை. வெறும்வார்த்தைதான் செலவு. கஞ்சத்தனம் பாராட்டுவதில் தேவை இல்லை. கைதட்டிபாராட்டினால் குழந்தைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். உயிருக்குப் போராடும்நேரத்திலும் கை தட்டினால் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. இப்படி பலகருத்துக்கள் மற்றும் மனித நேயம் விதைக்கும் பல செய்திகள் படத்தில் உள்ளது.

பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யும் கதாநாயகனின் புது செருப்பு விழுந்துவிட கொஞ்ச தூரம் சென்ற பின்பு பேருந்து நின்று நடந்து வருபவனின் விழுந்தசெருப்பை கதாநாயகி எத்தி விளையாண்டு வந்து அவனிடம் சேர்ப்பது. ர்pங் டோன்நன்றாக உள்ளது. எனக்கு அனுப்புங்கள் எனக் கேட்பது, இப்படியே செல் போன் கலாட்டாநல்ல நகைச்சுவை மெல்லிய காதலை மிக நாகரிகமாக காட்டிய இயக்குநர்பாராட்டுக்குரியவர். ஆவரவர் காதல் மலரும் நினைவுகளாக நினைவுக்கு வந்துவிடுகின்றது.

பசங்க மற்ற பசங்களைப் பார்த்து சட்டையை டவுசருக்கு உள்ளே விடும் பழக்கத்தைப்(இன் செய்தல்) பழகுதல். மாணவர்களின் சண்டையை நிறுத்த ஆசிரியரை அழைக்க, அவர்அவன்களை இங்கே கூட்டி வா என்று சொல்ல, வந்து சொல்லியும் கேட்காமல் சண்டையைபோட்டுக் கொண்டிருக்க, மாணவர்களின் சண்டையை நிறுத்த மாணவி தேசிய கீதத்தை ஒலிபெருக்கியில் போட்டவுடன் சண்டையை விட்டு விட்டு எழுந்து நின்று மரியாதைசெலுத்தும் காட்சி மிக நன்று.

அதற்கு தலைமையாசிரியர் பாராட்டி விட்டு இதை சட்டசபையில் கடைபிடிக்க வேண்டும்என்பது நல்ல குத்தல். வசனம் மிக்க நன்றாக உள்ளது. பசங்களின் அமர்க்களம்அட்டகாசம்.

பாடல்கள் இனிமையாக உள்ளது. மெல்லிசை காதில் ரிங்காரம் இடுகின்றன. குத்துப்பாட்டு படத்தில் இல்லை. இசைமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திலும்வெற்றிக்கொடி நாட்டி உள்ளார். பசங்க கூட்டத்தை பிரம்மாண்டமாகக் கூட்டி கையில் இட்லித் தட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்து பார்க்க அழகாக இருந்தது.பசங்களின் ஆடல் சிறப்பாக உள்ளது. அப்பா சைக்கிள் வாங்கித் தரவில்லை என்றகோபத்தை மறந்து சிறுவன் நான் காரில் செல்கிறேன் என கற்பனையாக சிறுவன் சொல்வதுமனத்தை உருக்கும். பல காட்சிகள் படம் முடிந்த பிறகும் நம்மை அசை போடவைக்கின்றன. சண்டையை மறந்து இரண்டு குடும்பம் இணைவது இனிமையான காட்சிகள்.

கதாநாயகியின் செல் வாங்கி கதாநாயகன் தன் எண்ணைப் போட்டுப் பார்க்கும் போதுபுருஸ் என்று வருகின்றதே புருஸ்லீயா? புருசனா? என கேட்பது இப்படி பலநிகழ்வுகள், செல் ரகளை என கலகலப்பாக காட்சிகள் நகருகின்றன. உடன் தானம் செய்வோம்என எழுதி வைத்தல். சிறுவர்கள் சண்டையில் பெரியவர்கள் தலையிடக் கூடாது என்றசெய்தியை பலமாக வலியுறுத்தி உள்ளனர். கணவன் மனைவி சண்டை குழந்தைகளைப் பாதிக்கும் என்று எடுத்துக் கூறி ஆசிரியர், கணவன் மனைவியிடம் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். சண்டை போடக்கூடாது.நிறுவனத்தில் முன்பின் தெரியாத வரும் நபரிடம் பொறுமை காப்பது போல, உடன் வாழும்தோழி முதுமையில் உதவிடும் மனைவியிடம் பொறுமை கடைபிடிப்பதில் தவறு ஒன்றுமில்லை,
 

eraeravik@gmail.com

 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.