பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 10)

முனைவர் செ.இராஜேஸ்வரி


எம்ஜிஆர் கொடுத்த காதல் பரிசு

எம்.ஜி.ஆர் படங்களை விரும்பி பார்ப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் தன் படங்களில் பெண்களை மென்மையாக நடத்திய விதமும் அவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்த விதமும் வயதானவர்களை தாயாகவும் இளம்பெண்களை சகோதரியாகவும் காதலியை சம மரியாதையுடனும் நடத்திய விதமும் என்று உறுதியாகக் கூறலாம். நிஜ வாழ்விலும் அவர் பெண்களைப் போற்றி பாதுகாத்து வந்தார். அவருடன் இணைந்து தன் திரையுலகப் பயணத்தை தொடங்கி அவருடனேயே முடித்த ஜி சகுந்தலா அவர் நாடகமன்றங்களில் நடித்தபோஎது தான் முதலில் சென்று விடாமல் பெண்கள் செல்லும் காரை முதலில் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு அவர்களுடன் மற்றவர்கள் செல்லும் காரை அனுப்பிவிட்டு பிறகு கடைசியாக எம் ஜி ஆர் தனது காரில் கிளம்புவார் என்றார். ஒரு முறை நாடகம் முடிந்து இரவில் வரும்போது காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஒடியது. சாலைகளிலும் பெருவெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. . எம் ஜி ஆர் தனது காரை விட்டிறங்கி தலையில் பெரிய தலைப்பாகை கட்டியபடி கையில் நீண்ட டார்ச் லைட்டுடன் சாலையில் நின்றபடி கார்களை கவனமாக அனுப்பிவிட்டு பின்பு கடைசியாக தனது காரில் ஏறி வந்தார். அப்போது வேறு பலரின் கார்களும் அந்த சாலையில் வந்துகொண்டிருந்தன. அவைகளையும் எம் ஜி ஆர் ஒன்றன் பின் ஒன்றாக போக வழி காட்டி உதவினார்.. எனவே பெண்களை வெளியே அழைத்து செல்லும்போதும் மிகவும் கவனமாக அழைத்து சென்று திரும்புவார். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும உடனே விசாரித்து தீர்த்து வைப்பார்.

காதல் காட்சிகளில் மிக மென்மையாக கனிவாக நடந்து கொள்ளும் எம்ஜிஆர் சில படங்களில் காதலிக்கு பரிசளித்த காட்சிகளும் உண்டு. ஒருவர் மற்றவருக்கு அளிக்கும் பரிசு என்பது ஒருவருடைய குணநலன்களை வெளிப்படுத்தும் அம்சமாக திகழ்கிறது; அது பெறுபவருக்கு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும்; கொடுப்பவரின் உள்ளத்தின் உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்; என்னிடம் இருக்கிறது என்று எதையாவது தூக்கி கொடுத்து விடுவது உண்மையான பரிசாக இருக்காது; பரிசைப் பெற்றுக் கொள்வோர் மனதுக்கும் வாழ்க்கைக்கும் ஏற்றதாக பயன் அளிப்பதாக இருந்தால் மட்டுமே அந்த பரிசு உண்மையான பரிசாக இருக்கும்.

காதலிக்கு பரிசளிக்கும்போது எம்ஜிஆர் அந்த காட்சியை மிக அருமையாக தன்னுடைய இமேஜுக்கு இன்னும் கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைத்திருப்பர். ஒவ்வொரு காட்சியையும் அவர் அப்படித்தான் அமைக்கின்றார் என்றாலும் தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணோடு ஆன தொடர்பு ஜiவெநசயஉவழைஸெ மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி இருப்பார்.

எம்ஜிஆர் நடித்த பரிசு படத்தில் எம்ஜிஆர் தன்னை ஓடத்தில் அழைத்துப்போய் கரையில் சேர்க்கும் ஓடக்கார பெண்ணான சாவித்திரிக்கு ஐந்து ரூபாய் பரிசளிப்பார். அந்த இடத்துக்கான பயணக்கட்டணம் அந்த காலத்தில் ஐம்பது காசு அல்லது ஒரு ரூபாய் ஆக இருந்திருக்கலாம். ஆனால் இவர் ஒரு முழு ஐந்து ரூபாய் நோட்டை அப்பெண்ணிடம் கொடுத்தார். அந்த ஐந்து ரூபாயை வைத்து ஒரு பாட்டு காட்சியும் அந்தப் படத்தில் உண்டு. அந்த பாட்டு காட்சி அவர்களின் காதலை அதன் புனிதத்தை வெளிப்படுத்துவதாகவும் அந்த ஐந்து ரூபாய் நோட்டு ஒரு காதல் பரிசு என்பதையும் புலப்படுத்தும்.

எண்ண எண்ண இனிக்குது
        ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா - கண்ணை
        வட்டமிட்டு மறைக்குது அஞ்சு ரூபா


என்று தொடங்கும் இந்த பாடல் பேச்சுவழக்கில் அஞ்சு ரூபா என மகிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த காதல் பரிசு முக்கியத்துவம் இத்துடன் முடிந்து விடவில்லை.

எம்.ஜி.ஆருக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடைபெறாது. எம்ஜிஆருக்கும் புத்தி சுவாதீனமில்லாத ராகினிக்கும் திருமணம் நடந்து விடும். அப்போது அந்த திருமணத்துக்கு வரும் சாவித்திரி இந்த அஞ்சு ரூபாயை எம்ஜிஆருக்கும் எம்ஜிஆர் தன் கழுத்தில் தனக்கு அணிவித்த தங்கச்சங்கிலியை மணமகள் ராகினிக்கும் பரிசாக கொடுப்பார். பின்னர் ராகினி இறந்துபோன பிறகு மீண்டும் காதலர் இணைவர்.

எம் ஜி ஆர் படத்தில் எந்த சூழ்நிலையிலும் அவர் தன காதலியை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றதாக கதை அமையாது. இடையில் ஏற்படும் பிரிவு தற்காலிகமானதாகவே அமைவதால் பெண்கள் தைரியமாக படம் பார்க்க முன் வருவர். எம் ஜி ஆர் தன்னை நம்பிய பெண்களை நட்டாற்றில் விடுவதில்லை என்ற எண்ணம் வலுப்பட்டதால் அவரை பெண்கள் இறுதி வரை நம்பினர். அந்த நம்பிக்கையில் தான் அண்ணாதிமுக கட்சிக்கு வீட்டினர் எதிர்ப்பையும் மீறி துணிந்து வாக்களித்தனர்.

மன்னாதி மன்னன் படத்தில் அவர் தான் காதலித்த நாட்டியமாடும் குலத்தை சேர்ந்த பத்மினியை மணக்காமல் தன் தாயின் மானம் காக்க மேற்கொண்ட போராட்டத்தில் அவர் சோழ இளவரசி அஞ்சலி தேவியை மணக்க நேர்ந்தது.

கணையாழி இங்கே மணவாளன் அங்கெ
காணாமல் நானம் உயிர் வாழ்வது எங்கே

என பத்மினி பாடும் பாடல் திரையிசை வரலாற்றில் தனக்கேன் ஓர் இடத்தை பிடித்தது. தாய்க்குப் பின் தாரம் என்ற கருத்து அவரது ரசிகர்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து அல்லவா. எனவே இப்படத்தில் தாய்க்காக நடத்திய போஎராட்டத்தில் அவர் தன காதலியை இழந்துவிட்டார். இது ஏற்றுக்கொள்ள கூடியதாக அமைந்ததால் தான் படம் பெரியளவில் வெற்றி பெற்றது. எம் ஜி ஆர் படங்கள் அவர் ஒரு ரட்சகர்இ நல்லவர்; அன்பானவர்; நேர்மையானவர் எனப் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டின. இதனால் அவர் படங்களில் பிழியப் பிழிய அழ வேண்டிய சோகம் இருக்காது.

உழைப்புக்கான பரிசு


பரிசு படத்தில் எம்ஜிஆரின் பண வசதியை காட்டும் விதமாக அவர் சாவித்திரிக்கு அளித்த தங்கச்சங்கிலி அமைகின்றது; ஆராய்ச்சியாளர் என்ற பெயரில் அங்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரி என்பதால் அவருடைய பண வசதிக்கு ஏற்ற வகையில் தன் வருங்கால மனைவிக்கு அவர் தங்கச்சங்கிலி அணிவிப்பது இயற்கை. ஆனால் ஓடக்காரப் பெண் பத்து மடங்கு அதிகமான கூலியைக் கொடுப்பது அந்த உழைப்பின் பலனை உழைப்பின் உயர்வை அவர் உணர்ந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் உழைப்பாளிகளின் பேர் உழைப்பாளிகளின் மீது தனக்குள்ள அபிமானத்தையும் தன் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அவர் இந்த ஐந்து ரூபாய் மூலம் உணர்த்துகிறார்.

எம்ஜி ஆர் நிஜ வாழ்விலும் அவர் கண்டவருக்கெல்லாம் உதவும் தன்மை உடையவர் என்பதால் இன்னார் இனியார் எனாமல் யாருக்கு உதவினாலும் அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக பணம் கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி அதை கண்டு மைக்ழ்சி அடைவது அவருடைய இயல்பாகும். 'ஈத்துவக்கும் இன்பம்' என்பதற்குப் பேரிலக்கணமாகத் திகழ்ந்தவர் எம் ஜி ஆர். எனவே இந்த கட்டணமான ஐந்து ரூபாய் ஏதோ படத்துக்காகவோ ஒரு பெண்ணை மயக்குவதற்காகவோ எடுக்கப்பட்ட காட்சி அல்ல. இயற்கையிலேயே அவர் ஒன்றுக்கு பத்தாக செய்யும் இயல்புடையவர் என்பதை விளக்கிக் காட்டும் ஒரு காட்சியாகும்.

இனி உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு விளக்கிக் கூறுவோம். ஒருமுறை எம்ஜிஆர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது கார் நின்று விட்டது என்ன கோளாறு என்று தெரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருந்த போது அந்தப் பக்கமாக வந்த ஒரு இளைஞன் தனக்கு கொஞ்சம் கார் ரிப்பேர் தெரியும் என்றும் தான் அதை சரிசெய்ய முயல்வதாகவும் கூறினார். எம்ஜிஆர் உடனே சரி என்று சம்மதித்தார் அவன் பரபரவென்று இயங்கினான். வெகு சுறுசுறுப்பாக மடமடவென்று அந்த வேலையை செய்து முடித்தான். அவனுடைய சுறுசுறுப்பையும் வேலை நுட்பத்தையும் வேலைத் திறனையும் கண்ட எம்ஜிஆர் அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். மற்றவர்களாக இருந்தால் வேலைக்கேற்ற கூலியைக் கொடுத்து விட்டு கூடுதலாக 100 200 கொடுத்து அனுப்பியிருப்பார்கள். ஆபத்து காலத்தில் உதவியவர்களுக்கு தங்கள் நன்றிக் கடனை செலுத்துவது நல்லவர்களாகிய எல்லோருக்கும் இருக்கும் பண்பு தான். ஆனால் எம்ஜிஆர் சராசரி மனிதர் அல்லவே; எனவே அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.

எம் ஜி ஆர் அந்த இளைஞனுக்கு நிரந்தரமாக ஒரு தொழிலை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நினைத்து அவர் முப்பது சைக்கிள்கள் வாங்கப் பணம் கொடுத்தார். அந்த இளைஞனுக்கு ஒரு சைக்கிள் கடையை உருவாக்கிக் கொடுத்தார். பின்பு ஒரு முறை அந்த இளைஞரை எம் ஜி ஆர் சந்தித்தபோது அவர் தனது கடையின் சைக்கிள்களில் எம ஜி ஆர் என்று பெயிண்டால் எழுதியிருந்தார். அப்போது எம்ஜிஆர் அவரை பார்த்து 'நீ இப்படி செய்யாதே; நீ எம்ஜிஆர் என்று எழுதி வைத்தால் என் ரசிகர்கள் மட்டும் தான் உன்னிடம் சைக்கிள் எடுப்பார்கள்; காங்கிரஸ்காரர்கள் பொதுமக்கள் உன்னிடம் சைக்கிள் எடுக்கத் தயங்குவார்கள். அதனால் நீ எம்ஜிஆர் என்ற பெயரை அழித்துவிட்டு எல்லோருக்கும் பொதுவான ஒரு ஒரு சைக்கிள் கடையை நடத்திக் கொண்டு வா'' என்று அவருக்கு அறிவுரை கூறினார். இவர் தான் எம்.ஜி.ஆர்.

முப்பது என்பது என்ன கணக்கு என்பது தெரியவில்லை. மதுரையில் சின்னமுத்து என்ற ரசிகருக்குஃ அதிமுக தொண்டருக்கு ஃ ஒரு ரிகஷாக்காரருக்கும் எம் ஜி ஆர் முப்பது ரிக்க்ஷா வாங்கி கொடுத்து தனது ஆட்களுக்கு வழங்கச் சொல்லி அவர்களுக்கு சொந்த தொழில் ஏற்படுத்தி கொடுத்தார். அவரை நிர்வாகம் செய்துகொள்ளும்படி கூறியிருந்தார். இன்றைக்கும் தீவிர ரசிகரே இருக்கும் சின்னமுத்து என்ற எம் ஜி ஆர் ஜஅவரது பட்டப்பெயர்எம் ஜி ஆரை பற்றி நன்றியோடு மணிக்கணக்காக பேசுகிறார்.

சைக்கிள் கடை வைக்க தானே உதவி செய்து இருந்தாலும் கூட தன்னுடைய பெயர் பிரபலம் அடைவதை விரும்பாமல் அந்த உழைப்பாளி நல்ல முறையில் முன்னேறவேண்டும் அவனுடைய உழைப்புக்கேற்ற உயர்வை அவன் தன் வாழ்வில் அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அந்த இளைஞனுக்கு எம் ஜி ஆர் அறிவுரைகளை வழங்கினார். ஒரு டியுப் லைட்டை கோயிலுக்கு கொடுத்துவிட்டு அதில் தன பெயரை சிவப்பு பெயிண்டில் எழுதி வைக்கும் மனிதர்களுக்கு நடுவில் எம் ஜி ஆர் ஒரு தனி மனிதராகவே திகழ்ந்தார். எம்ஜிஆர் தனது படத்தில் மட்டும் உழைப்பாளிகளுக்கு ஒன்றுக்கு பத்தாக கூலி கொடுத்து அவர்களின் உழைப்பின் பெருமையை உயர்த்த வேண்டும் என்று நினைப்பவர் கிடையாது நிஜவாழ்விலும் அவர் உழைப்பின் பெருமையை உயர்த்த தன்னாலான அனைத்து காரியங்களையும் செய்து வந்தார் இன்னும் பலருக்கு எம்ஜிஆர் இதுபோன்ற உதவிகளை அவர்களின் உழைப்பின் மேன்மை சிறப்புற வேண்டி செய்திருக்கின்றார்.
 
காதல் பரிசாக திருக்குறள்


பொதுவாக காதலிக்கு ஒரு காதலன் பரிசளிக்கும்போது மலர் இ மலர் மாலைஇ விலை உயர்ந்த சேலை துணிமணிகள் ஆடை ஆபரணங்கள் நகைகள் போன்றவற்றை வழங்குவது இயல்பு. ஆனால் எம்ஜிஆர் சற்று வித்தியாசமானவராக சில படங்களில் வித்தியாசமான பரிசுகளை அளித்தார். ரகசியப் போலிஸ் ௧௧௫ படத்தில் தான் காவல்துறை அதிகாரி என்பதை மறைத்து நாடக வாய்ப்பு தேடும் ஒரு ஏழை இளைஞனாக நடித்திருப்பார். இப்படத்தில் ஜெயலலிதா பெரிய பணக்காரர் வீட்டுப் பெண்; அவருடைய பிறந்தநாளுக்கு பரிசாக தராமல் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எம்ஜிஆர் ஹாப்பி பர்த்டே டூ யூ என்று பாடும் பாடலில் கலந்துகொண்டு ரகசியமாக ஜன்னல் வழியாக நின்று பார்த்தபடி பாடுவார் அதன்பின்பு ஜெயலலிதாவை யாருக்கும் தெரியாமல் தோட்டத்திற்கு வரும்படி அழைத்து அங்கு வைத்து அவருக்கு ஒரு சின்ன பாக்கெட் திருக்குறளை பரிசாக அளிப்பார். அப்போது அவருக்கு ஒரு திருக்குறளை வாசித்து காண்பித்து இது போல வாழவேண்டும் என்று சொல்லியும் காட்டுவார்.

திருக்குறள் என்ற நூல் உலகப் பொதுமறையாக கொள்ளப்படவேண்டிய மிகச் சிறந்த நூல். எம் ஜி ஆர் மதம் இனம் மொழி நாடு வேறுபாடுகளை கடந்த மனிதநேயவாதி என்பதால் இந்நூலின் மீது அவருருக்கு தீவிர பற்றும் பிடிப்பும் இருந்தது. அவர் திருக்குறள் வாசிப்பதாக சினிமாவில் தோன்றும் காட்சிகள் வேறு சில படங்களிலும் உண்டு. இது மட்டுமல்ல அவர் தன் வீட்டில் ஒரு குழந்தை பிறந்த போது அந்த குழந்தைக்கு அதன் பெற்றோரிடம் எழுதிக்கொடுத்த வாழ்த்து மடலில் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி குறள் போல நீ வாழ வேண்டும் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

தந்தை மகற்காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்


என்று குறளை எழுதிக் கொடுத்தார். அதற்கு கீழ் கையெழுத்திடும்போது எம் ஜி ராமச்சந்திரன் என்ற பெயருடன் வீட்டில் தன்னை அந்த குழந்தையின் தாய் அழைக்கின்ற சேச்சா என்ற பெயரையும் சேர்த்து எழுதி தருகின்றார். வீட்டில் அவரை அவருடைய அண்ணன் பிள்ளைகள் சித்தப்பா என்ற பொருளில் சேச்சா என்று அழைத்தனர். அவருடைய மனைவியின் சகோதரர் மணி அவர்களின் குசந்தைக்களும்ம் அவரை சேச்சா என்றே அழைத்து வந்தனர் எல்லா குழந்தைகளுக்கும் அவர் சேச்சா தான்.

எம் ஜி ஆர் எழுதிக்கொடுத்த வாழ்த்து மடல் தன்னுடைய குறிப்பேட்டில் தன் வீட்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோரிடம் எழுதிக்கொடுத்தது தானே தவிர மக்களுக்காக தேர்தலுக்காக எழுதிக் கொடுத்தது அல்ல. அந்த மடலிலும் அவர் திருக்குறளை தான் மேற்கோள் காட்டியுள்ளார். அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் திருக்குறளுக்கு என்று தனியாக ஓர் இடம் இருந்திருக்கிறது. திருக்குறளை அவர் மிகவும் நேசித்தார். வாசித்தார். குறள் காட்டிய வழியில் வாழ வேண்டும் என்று நினைத்திருக்கிறார் அவர் தன்னுடைய வளர்ப்பு மகன் ராதாவிடம் தினமும் பத்து திருக்குறள் படித்து தன்னிடம் ஒப்பித்து விட்டு தான் தூங்கப் போக வேண்டும் என்று சொல்வாராம் இதை ராதாவே என்னிடம் தெரிவித்தார். அவர் தன்னுடைய பிள்ளைகள் திருக்குறள் செல்வர்களாக திகழவேண்டும் என்பதில் அக்கறையும் கவனமும் செலுத்தி வந்திருக்கிறார்.

எம்ஜிஆரின் மனங்கவர்ந்த நூல் திருக்குறள் என்பதில் ஐயமே இல்லை. ஒருவேளை அவர் இன்னும் சில வருடங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அவர் திருக்குறளை இலவசமாக வழங்கி இருக்கக்கூடும். நம்நாடு படத்தில் அவர் குழந்தைகளிடம் பாடும் பாடலில் .

மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு

என்று ஒரு வரி இடம்பெறும். இந்த வரி ஏதோ கவிஞர் எழுதியதால் எம்ஜிஆர் வாய் அசைத்த வரிகள் அல்ல அது அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தோன்றிய வார்த்தைகள்தான்.

காதலிக்கு 'புருச்'

எம் ஜி ஆரின் படங்களில் காதலிக்கு வெவ்வேறு பரிசுகளை தருவதாகத்தான் காட்சிகள் அமைந்திருக்கின்றன. எங்கள் தங்கம் படத்தில் காதலியின் பிறந்த நாளன்று மாறுவேடத்தில் வந்து அவருக்கு ஒரு'புருச்' குத்திவிடுவார். இந்த காட்சி காதல் ரசம் பொங்க நயமாக நாசுக்காக கண்ணியமாக எடுக்கப்பட்டிருக்கும். பெண்களை கவரும் வகையில் இந்த காட்சி மிக அற்புதமாக வசனமே இல்லாமல் படம் பிடிக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியில் வசனம் அல்லாத நடிப்பு மட்டுமே உள்ள ரசமான இடங்களும் உண்டு.

எம்ஜிஆர் ஒரு 'புருச்சை' கொண்டு வந்து ஜெயலலிதாவுக்கு கொடுப்பார். அப்போது ஜெயலலிதா வாங்க மறுத்து தலையை அசைத்து விட்டு அந்தப் 'புருச்சை' எம் ஜி ஆரே தன்னுடைய மேலாடையில் ஜஒரு நீண்ட கவுன்ஸ குத்திவிடும்படி விரலால் சைகை காட்டுவார். ஜெயலலிதா சுட்டிக் காட்டிய இடத்தில் ''எப்படி நான் அங்கே புருச்சை குத்துவது'' என்பது என்று கேட்பதுபோல எம்ஜிஆர் வசனமின்றி முக ஜாடையால் கை அசைவால் கேட்பார். இந்தக் காட்சியில் எம் ஜி ஆர் அற்புதமாக நடித்திருப்பார். எம் ஜி ஆரின் நிலைமையை நினைத்து திரையரங்கில் ரசிகர்கள் சிரிப்பார்கள். எம் ஜி ஆர் முகத்தில் காதல்இ தர்மசங்கடம்இ நாணம் ஆகிய அனைத்தும் வெளிப்படும் விதமாக மிக அருமையாக வசனமே இல்லாமல் இக்காட்சி அமைந்திருக்கும். ஆனால் ஜெயலலிதா உறுதியாக இருப்பதாக எம்ஜிஆர் அந்த 'புருச்சை' குத்துவார். ஆனால் குத்தும்போது அதன் ஊசிப்பகுதி ஜெயலலிதாவின் உடம்பில் பட்டதும் ஜெயலலிதா 'ஆ' என்று கத்தி விடுவார். உடனே எம் ஜி ஆர் பதறிப்போய் தன் காதலியிடம் சாரி ஜளுழுசுசுலுஸ என்று கேட்டுக்கொண்டு 'முன்ன பின்ன நான் இதுபோல் குத்தியதில்லை அல்லவா; அதனால் இப்படி தெரியாமல் நடந்துவிட்டது' என்பது போல முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு மிக கவனமாக இந்த புருச்சை குத்தி விடுவார். பின்னணி இசை கூட தாம் தூம் என்று அலறாத வசனம் இல்லாத இந்த காட்சி இருவரும் ரகசியமாக சந்தித்து மகிழும் காட்சியாக அமைந்திருகும். மிக அமைதியாக அதே நேரத்தில் ஆழமான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் ஒருவருக்கொருவர் அவர்களின் அன்பின் ஆழத்தை பரிமாறிக் கொள்ளும் விதத்தை காட்டும் வகையில் மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற காதல் பரிசு எம் ஜி ஆர் படத்தில் உண்டு.

உலகம் சுற்றும் வாலிபன் படம் தமிழ் திரையுலகில் அதிக வசூல் பெற்ற படமாகும். கிராமங்களில் மழைக்காலத்தின் போது எவரும் படத்துக்கு வர மாட்டார்கள்; ஆனால் எம்ஜிஆர் படம் போட்டால் மட்டும் எந்த மழையிலும் வெயிலிலும் ஆண்களும் பெண்களும் வந்து அந்த படத்தை பார்த்துவிட்டுப் போவார்கள். எம்ஜிஆர் படங்கள் மட்டும் இல்லையென்றால் சின்ன திரையரங்குகளில் உரிமையாளர்கள் இரண்டு மூன்று மாதம் முழு நஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். எம்ஜிஆர் படங்களால் மட்டுமே பல திரையரங்குகள் லாபமாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் ஒரு வாரம் திரையிடப்பட்டு எம் ஜி ஆர் படங்கள் இலட்சத்துக்கு அதிகமாக வசூல் செய்துவிடுகின்றன. நேற்றும் இன்றும் என்றும் எம்ஜிஆரால் லாபம் அடைந்தவர்கள் திரையுலகில் இருக்கின்றனர். இன்றைக்கும் எம்ஜிஆர் பற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் அவற்றை நடத்துவோருக்கும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவோருக்கும் நல்ல பண வரவை தந்து கொண்டிருக்கின்றன. இதனை யாராலும் மறுக்க இயலாது. எம் ஜி ஆர் யானையை போலே இருந்தாலும் ஆயிரம் பொன் மறைந்தாலும் ஆயிரம் பொன். செத்தும் கொடுத்த சீதக்காதியாக அவர் திகழ்கிறார். எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமே ஒளிவிளக்கு ஐம்பதாண்டு வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து தங்களின் சொந்தப் பணத்தைக் கொண்டு நடத்துகின்றனர்.

உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படம் என்பதோடு அது ஒரு இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானியின் கதை சர்வதேச போலீசார் ஒருவரின் கதை என்பதாக அது ஆங்கில படத்துக்கு இணையாக ஒரு சர்வதேச தளத்தில் வைத்து பார்க்கப்படும் படமாக எடுக்கப் பட்டிருக்கும். அதேவேளையில் அந்த படத்தில் அமைந்துள்ள பாடல்களும் நகைச்சுவை காட்சிகளும் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்வதாக அமைந்தன. மேலும் லிவிங் டுகெதர் என்ற முறையிலும் எம்.ஜி.ஆர் – மஞ்சுளா தொடர்பான காட்சிகள் புரிந்துகொள்ளப்படுவதாக இருக்கும். 

இன்றைய நவீன உலகில் இளைஞர்களின் வாழ்க்கை முறை பெற்றோர்களை விடுத்து தனியாக வாழ்கின்ற ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது இதுவும் அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த படத்தில் கதாநாயகன் கதாநாயகி யாருக்குமே பெற்றோர் கிடையாது. கதாநாயகன் கதாநாயகி திருமணத்தை கூட அவருடன் இருக்கும் ஒரு சமையல்காரர் தான் நடத்தி வைப்பார். இந்த படத்தில் அண்ணன் எம் ஜி ஆர் தன காதலி மஞ்சுளாவுக்கு ஒரு தங்க சங்கிலி பரிசளிப்பார். அது வெறும் பரிசாக மட்டும் இருக்காது அந்த கதைக்கு ஒரு முக்கிய கதையின் நகர்வுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் அணு விஞ்ஞானியாக வரும் என்கிறார் தன்னுடைய ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக உலகம் சுற்றக் கிளம்புவார். அப்போது தன் காதலிக்கு இந்தத் தங்கச் சங்கிலியை அணிவிப்பார். இப்போதைக்கு இந்த சங்கிலி அணிவிக்கிறேன். விரைவில் மணமாலைஏ தருகிறேன் என்று சொல்லிவிட்டு அது திருமணத்திற்கு முந்திய காதல் பரிசு என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லி வைப்பார். இந்தச் சங்கிலியில் பதக்கத்திற்குள் அவர் ஒரு முக்கியமான ரகசிய குறிப்பை வைத்திருப்பார். அவருடைய ஆராய்ச்சிக் குறிப்பு எங்கு பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதை குறிக்கும் வகையில் ஒரு ரகசிய குறிப்பை எழுதி அதை நான்காக கிழித்து அதன் ஒரு பகுதியை காதலிக்குப் பரிசளித்த சங்கிலியின் டாலருக்குள் வைத்திருப்பார். அந்த சங்கிலி வெறும் காதல் பரிசு மட்டுமல்ல அவருடைய ஆய்வுக்குறிப்புகள் அடங்கிய ரகசிய பொக்கிஷமாகவும் இருக்கின்றது. இதுதான் எம்ஜிஆரின் ஒரு தனித்திறன். அவருடைய கதைகளில் தனிநபர் கதையும் பொது பிரச்சனையும் ஒன்றோடு ஒன்று இணைந்து VENN DIAGRAM போல அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் அமைப்பில் எம்ஜிஆர் இருந்து மூன்று வளையத்தில் இடையில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை பிரித்து தனித்தனியாக எடுத்து வைப்பார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் இவருடைய ஆராய்ச்சிக் குறிப்பு இருக்கும் இடமும் இவருடைய அன்பு காதலியின் பரிசும் ஒன்றாக இருக்கும். இந்த சங்கிலி மஞ்சுளாவிடம் இருந்து அவருடைய தோழி சந்திரகலாவுக்கு மாறிவிடும். பிறகு சந்திரகலாவின் கழுத்திலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த திருடன் ஒருவன் பறித்துவிடுவான். அவனிடமிருந்து இன்னொரு திருடனால் பறிக்கப்பட்டு இடம் மாறி விடும். சங்கிலி தான் மாறுமே தவிர டாலர் இந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காமெடியனான நாகேஷின் கையிலேயே தங்கிவிடும். இவ்வாறாக இந்த காதல் பரிசு இந்த கதையின் ஓட்டத்துக்கு உதவியாக இருக்கும்.

காதல் பரிசுகளுக்கு சில மாதிரிகள்

இக்கட்டுரையில் எம் ஜி ஆர் பெண்களின் மனதை கவரத்தக்கவகையில் படங்களில் அவர் வழங்கிய சில காதல் பரிசுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் கண்டோம். உழைப்புக்கு ஒரு அஞ்சு ருபாய்இ காதலுக்கு ஒரு புருச்; கதை ஓட்டத்துக்கு டாலருடன் கூடிய தங்கச் சங்கிலி என மூன்று பரிசுகளை கண்டோம். இவை படம் பார்ப்பவரால் மறக்க முடியாத பரிசுகள் ஆகும். குறிப்பாக பெண்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவை ஆகும்.

 

எம்.ஜி.ஆர் புகைப்படத்தொகுப்பு:






                                                                                                               

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்