பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 13)

முனைவர் செ.இராஜேஸ்வரி


எம்.ஜி.ஆர் பெண் எதிரிகளை எதிர்கொள்ளுதல்

எம்.ஜி.ஆர் படங்களில் கதாநாயகனுக்கு இருக்கும் முக்கியத்துவம் வில்லனுக்கும் தரப்பட்டிருக்கும். தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் இடைஞ்சல் தரக்கூடியவனாக வில்லன் இருப்பான். கதாநாயகன் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் நன்மை செய்யக் கூடியவராக இருப்பார். இந்நிலையில் ஒரு சில படங்களில் பெண்கள் எம்ஜிஆருக்கு எதிராக நிற்கும் காட்சிகள் வந்ததுண்டு.


கெட்ட பெண்களை எதிர்கொள்ளும் உத்தி

பெண்களை தம் படங்களில் அவரை கொடூரமாக தாக்குவது கிடையாது. மென்மையாகக் கையாளும் எம்ஜிஆர் கெடுமதி உள்ள பெண்ணாக இருந்தாலும் அவரை அடிப்பதோ கொடுமைப்படுத்துவதோ வார்த்தைகளால் ஏசுவதோ புண்படுத்துவதோ கிடையாது. இதை ஒரு கொள்கையாக எம்ஜிஆர் படங்களில் கடைப்பிடித்து வந்தார். பெண்களிடம் அவர் காட்டிய கண்ணியமும் அவர்களை கௌரவமாக நடத்திய பண்பும் பெண்களை மிக்கவும் கவர்ந்தது. அவர் எந்த படத்திலும் பெண்ணை ஏடி வாடி போடி என்று பேசியது கிடையாது. சிற்றன்னை கொடுமை இருக்கும் படங்களில் கூட அவர் சித்தி என்று மரியாதையாக அழைத்துப் பேசுவார்.

பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் முகராசி, பெரிய இடத்து பெண், மருத நாட்டு இளவரசி, மகாதேவி, மதுரை வீரன், அடிமைப்பெண் போன்ற படங்களில் காட்டியிருப்பார். ஆனால் எந்த பெண்ணும் வில்லத்தனமாக சண்டை போட்டு அவளை வெற்றி பெறுவதாக காட்சிகள் இல்லை.

இதயக்கனியில் ராஜசுலோச்சனா


ஒரு பெண் முழுப்படத்திலும் எம்ஜிஆரை எதிர்த்து நின்றது இதயக்கனியில் மட்டுமே. ஆரம்பத்திலிருந்து வில்லியாக அவரைக் காட்டாமல் கடைசி காட்சியில் மட்டும் வில்லியாகக் காட்டி அவர்தான் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவி என்று தெரிவித்த உடன் போலீஸ் விசாரணைக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவார். வில்லியோடு அதாவது பெண்ணோடு எதிர்த்து எம்ஜிஆர் சண்டை போடும் காட்சிகள் கிடையாது. அந்த பெண்ணை ஆண் போலீசாரோ பெண் போலீசார் அடிக்காமல் வதைக்காமல் ஐஸ் படுக்கையின் மீது படுக்கவைத்து குளிர் தாங்காமல் அவன் உண்மையைச் சொல்வதாக காட்சியை அமைத்து இருப்பார்கள்.

சண்டை காட்சியில் குமாரி பத்மினி


தயாரிப்பாளரான ஏ பி நாகராஜனுக்கு வேண்டப்பட்டவராக இருந்த குமாரி பத்மினிக்கு நவரத்தினம் படத்தில் எம் ஜி ஆரை எதிர்க்கும் ஒரு வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்படத்தில் ஒன்பது பெண்கள் எம்ஜிஆர் வாழ்வில் குறுக்கிட்டாலும் அவர்களில் லதா மட்டுமே அவருக்கு ஜோடியாக இருப்பார். அந்த ஒன்பது பெண்களில் ஒருவராக குமாரி பத்மினி இடம்பெறாமல் வில்லியாக எதிர்த்து சண்டை போடும் ஒரு பெண்ணாக ஒரு கதாபாத்திரம் ஏற்று இருந்தார். அந்தக் காட்சியில் எம்ஜிஆர் அந்த பெண்ணோடு நேருக்கு நேராக மோதாமல் அவரை அடித்து துன்புறுத்தாமல் சற்று விலகி அவருடைய தாக்குதலின் உக்கிரத்தை அவர் உணரும்படி செய்வார்.

அதாவது குட்டி பத்மினி எம்ஜிஆரை தாக்க வரும்போது எம்ஜிஆர் விலகிக் கொள்வார். குமாரி பத்மினி கீழே விழுந்து விடுவார். இவ்வாறு இரண்டு மூன்று முறை மாறி மாறி எம்ஜிஆர் விலகிக் கொள்ளவும் குமாரி பத்மினி எம்ஜிஆரை தாக்கும் வேகத்தோடு வந்து கீழே விழுந்து உருண்டு காயப்படுவதுமாக இந்த சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு பெண் தன்னுடைய மென்மையை மீறி தவறான பாதையில் சென்று நல்ல வழியில் நடக்கும் ஆணை தாக்கி துன்புறுத்துவதாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட ஒரு ஆண் அவளை எதிர் தாக்குதல் நடத்தி மடக்க கூடாது என்ற ஒரு நல்ல பாடம் இக்காட்சியின் மூலம் தெரிவிக்கப்படும்.

இன்னும் ஒரு பெண் எதிரி


பேபி ஷகிலாவை வில்லன் ஒரு பீரோவுக்குள் வைத்து பூட்டி விடுவார்.. அந்த குழந்தையை எம்ஜிஆர் காப்பாற்ற வேண்டும். அப்போது அந்த பீரோவின் நடுவில் இருக்கும் கம்பியில் ஒரு தேளை வில்லன் விட்டுவிடுவார். அந்தக் குழந்தையை காப்பாற்ற முடியாதபடி தேள் ஊர்ந்துகொண்டிருக்கும். எம் ஜி ஆர் குழந்தையை க் காப்பாற்ற கையை நீட்டினால் இந்த தேள் கொட்டி விடும் என்ற ஒரு ஆபத்தான சூழ்நிலையை வில்லன் உருவாக்கி இருப்பார். இதற்கிடையே அந்த பீரோவை பூட்டிய சாவியும் வில்லனின் துணைவியாக இருக்கும் பெண்ணிடம் கொடுக்கப்படும். கதவை உடைத்து திறந்தால் தேள் உள்ளே விழுந்து குழந்தையை கொட்டிவிடலாம். கதவை மெதுவாக திறக்கலாம் என்றால் சாவி அந்த பெண்ணிடம் இருக்கிறது.

எம்ஜிஆர் அந்தப் பெண்ணிடம் ‘சாவியைக் கொடு’ என்று கேட்பார். ஆனால் அவளோ சிரித்தபடி தன்னுடைய ஜாக்கெட்டுக்குள் போட்டு விடுவாள். இப்போது எம்ஜிஆரால் சாவியை எடுக்கவும் முடியாது; கதவை உடைக்க முடியாது; இப்படி ஒரு சிக்கலான கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆர் அந்த பெண்ணை தாக்காமலும் பிராவை உடைக்காமலும் சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டு விடும்.

எம் ஜி ஆர் மெதுவாக தேளின் வாலைப் பிடித்து தூக்கி அந்தப் பெண் மீது எறிவார். முதல் முறையாகப் படம் பார்க்கும் பெண்கள் ஐயோ என்று அலறுவர். ஆண்கள் சிரிப்பார்கள். படத்தில் அந்தப் பெண் தன்மீது அந்த தேள் விழுந்து தன்னை கொட்டி விடுமோ என்ற அச்சத்தில் ஜாக்கெட்டுக்குள் இருந்த சாவியை எடுத்து எறிந்துவிடுவாள். பின்னர் எம் ஜி ஆர் தன் கையில் வைத்திருந்த தேளை வெளியே எறிவார். அதை நசுக்கி கொல்ல மாட்டார். அதாவது அவர் அந்தப் பெண் மீது எறிவது போல ஒரு பாவனை செய்து அந்தப் பெண்ணை பயமுறுத்தி இருப்பாரே தவிர உண்மையில் அந்தப் பெண் மீது எறிந்திருக்கவே மாட்டார். அவள் மட்டுமே அந்த சாவியை எடுத்து கொடுக்க முடியும் என்பதால் அவளை கொஞ்சம் பயமுறுத்தி இருப்பார்.

பெண் எதிரியாலும் எம் ஜி ஆருக்கு பெண்களிடம் மதிப்பு


எதிரியாக இருந்தாலும் பெண்ணைத் தாக்காமல் ஏசாமல் பிறர் மூலமாகவும் கொடுஞ்செயல்களைச் செய்யாமல் நாகரீகமாகவும் கண்ணியமாகவும் எம்ஜிஆர் தன் படங்களில் நடந்து கொள்வதை கண்டு ரசிகைகள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

கட்சியில் ஓர் பெண் எதிரி


அண்ணா திமுக கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு வேடிக்கையான சம்பவம் நடைபெற்றது. ஷீலா பஜாஜ் என்ற பெண் எம் ஜி ஆர் கட்சியில் சேர்ந்து பணி செய்வதற்காக வந்தார். படித்தவர் என்பதால் எம் ஜி ஆரும் வரவேற்று மகளிர் அணியில் பதவியும் அளித்தார். பொற்செல்வி என்று பெயரையும் மாற்றி அமைத்தார். மேடைகளில் நன்றாக பேசினார் பெண்களை ஒருங்கிணைத்து தீவிரமாக கட்சி பணி ஆற்றினார்.

மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக உயர்ந்தார் சென்னை மாவட்ட மகளிரணி பொறுப்பை ஏற்ற டாக்டர் பொற்செல்வி விரைவில் மாநில அளவில் ஒரு பெற்றார்.

பொற்செல்வி பொதுக் கூட்டங்களில் பேசும்போது விலையுயர்ந்த ஆடை அணிந்து. கருப்பு கண்ணாடி போட்டு முழு மேக்கப்புடன் இவர் தோன்றியதால் கட்சியினர் மத்தியில் இவருக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது. ஒரு சினிமா நடிகை போன்ற தோரணையுடன் இருந்தாலும் படித்தவர் என்பதால் இவருக்கு கட்சியினர் மிகுந்த மரியாதை செலுத்தினர். தன்னுடைய கூட்டங்களுக்கு ஆட்கள் நிறைய வருவதைப் பார்த்த டாக்டர் பொற்செல்விக்கு சில மாதங்களிலேயே ஆணவம் தலைக்கேறி விட்டது. தன் போக்கில் செயல்பட ஆரம்பித்தார். தலைமைக்கு கட்டுப்படாமல் இவருடைய செயல்பாடுகள் இருப்பதை கண்டு கட்சி இவர் மீது நடவடிக்கை எடுத்தது.

பொற்செல்வி தனது ஆதரவாளர்களாக இருந்த சிலரை நம்பி அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய தூண்டுதலின் பெயரில் புரட்சி அண்ணா திமுக என்று ஒரு கட்சியைப் பதிவு செய்தார். பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் எம்ஜிஆர் மீது ஒரு புகார் பட்டியலை தயாரித்தார். இவரைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் இவரிடம் செலவழிக்க பணம் இல்லை என்று தெரிந்ததும் விலகிவிட்டனர். இவர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போநார். காமராஜர் கருணாநிதி பெரிய தலைவர்களுடன் அரசியல் செய்த எம்ஜிஆர் டாக்டர் இந்த பொற்செல்வியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியினரும் பத்திரிகையாளரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது அண்ணா திமுகவுக்கு வாரிசு உரிமை கொண்டாடிக் கொண்டு தீபா போல அன்றைக்கும் இந்த டாக்டர் பொற்செல்வி இருந்திருந்தார்.

எம் ஜி ஆருக்கு எதிரி என்றால்

எம் ஜி ஆர் பிரபல தமிழ் பத்திரிகையைத் தாக்கி எடுத்த படம் சந்திரோதயம். அதில் எம் ஆர் ராதா ‘தினக்கவர்ச்சி’ என்ற பத்திரிக்கை அதிபராக இருப்பார். அப்போது அவரிடம் பேசும் ஒரு வசனத்தில் ‘என் எதிரி கூட எனக்கு சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்’ என்பார். அது அவரது வால்க்கைளும் பின்பற்றி வந்த கொள்கை ஆகும் தன எதிரி தனக்கு சமமாக்னவராக இருக்க வேண்டும் என கருதுவார். இந்த கொள்கையை அவர் சினிமாவிலும் அரசியலிலும் பின்பற்றி வந்தார். இந்த கொள்கையை இவர் பின்பற்றியதால் தான் எம் ஜி ஆர் – சிவாஜி என்ற இருமை எதிர்வு தோன்றியது. இல்லையென்றால் சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ் எஸ் ஆர் போன்றோர் சம அந்தஸ்தில் இருந்திருப்பார்கள்.

                                                                                                            

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்