சொல்லாத சொல்லொன்றைச் சொல்

புலவர் முருகேசு மயில்வாகனன்

ல்நூல்கள் ஆய்ந்தறிந்த பண்டிதர்கள் கூட்டத்தில்
சொல்லாய்வு செய்கின்ற நேரத்தில் – வல்லவரே
சொல்லுகின்ற சொற்களை நன்றாய்ந்தே மற்றவர்கள்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்

சொல்லுகின்ற சொல்லின் பொருளறிந்து மற்றவர்கள்
நல்முறையில் ஏற்கின்ற நல்லவற்றை – வல்லதாய்
எல்லோர்க்கும் ஏற்புடைத்தாய் நற்பொருள் ஓங்கிநிற்கும்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.

பண்டை வழக்கிலுள்ள பற்பல சொற்களையே
இன்றுவரை பாவனையில்; ஈங்கிதனை – பின்னிறுத்தி
நல்ல புதியசொல்லை நன்றாய்ந்து மற்றவர்கள்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்

பேச்சு வழக்கிலே பேதம் பலவுண்டே
மூச்சுப் பயிற்சிபோல் முன்னெடுப்பீர் நல்லவற்றை
பல்லோரும் ஏற்கின்ற பாங்கான சொற்களிலே
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்