ஆங்காங்கே சற்று சிந்திப்போம்

வித்யாசாகர், குவைத்

ல்லிடுக்கில் -
சொட்டும் ஈரமாகவே
நம்மில் எத்தனை பேர்; எத்தனை பேர்;

தேடி அலைந்தால்
யாரோ எங்கோ கிடைக்கிறார்கள்
உண்மையும் யதார்த்தமுமாய்;

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..


வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

து சரி து தவறென
அளவுகோல் நிர்மாணிக்க கோரி தானே
எங்கேயோ நடக்கிறோம் நாமெல்லாம்...,

இப்படியா..
நகர்வது காலம்???

டவுள் - புதைந்துள்ள மனம்
கல்லாய் இறுகிய -
கால இடைவெளியிலே தான்
தொலைத்தோமோ நம் நிம்மதியை;

காற்றும் மழையும் கூட
நம் பயணத்தை கொண்டே
தன்னை அமைத்துக் கொள்கிறதென
நம் எல்லோருக்குமே புரிவதில்லை தான்;

பூகம்பம் வந்தால்
சுனாமி வந்தால்
புயல் வெள்ளம் கரை புரண்டால்
வெயில் கருக்கி எடுத்தால்
கோபம் கொள்கிறோம் நாம்;

நம்மில் எத்தனை பேர்
நாம் சரியென்று
எத்தனை முறை -
நாம் சிந்தித்திருப்போம்???

ஓஹோ! மறந்து விட்டேன்
அதற்குத் தான் -
அளவுகோல் இன்னும்
அளவிடவில்லை இல்லையா...

சரிசரி..
சரியென்று நம்மை மெச்சிக் கொள்வோம்;
தவறில்லை என்பதற்காகவாவது
சிந்திப்போமே???



vidhyasagar1976@gmail.com