கண்ணதாசன் அற்புதக் கவிஞன்

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

விண்ணவரும் தலைவணங்கும் வித்தகக் கவிஞன் - அற்புதக்
கண்ணதாசன் முத்தையா கலைத்தாயின் சொத்தையா - அவர்
விண்ணையும் மண்ணையும் பெண்ணையும் பாடியே - அன்று
அண்ணாவின் தம்பியாய் ஆற்றலில் உயரந்;தாரே - நின்று!

தமித்தாய் தரணிக்குத் தந்த இரண்டாம் கம்பன்
அமிழ்தினும் இனிய அற்புதச் சொல்நடைப் புகழேந்தி
தேமா பளிமா கூவிளம் கருவிளம் மரபென்றால்
ஆமா அவன்பாடும் சிங்கநடைத் தமிழுக்கு நிகராகுமா!?

கண்ண தாசனால் தமிழ்ச் சினிமா தரம்பெற்றது
விண்ணையும் முட்டும் வித்தக ஏழுத்தாளன்
எண்ணரிய மக்களின் இதயங்களைக் கவர்ந்தவர்
வண்ணங்கொள் கவியரகர் வரலாறாய் வாழ்வாரே!

பன்முகம் கொண்ட பைந்தமிழ் வித்தகர்
சின்னவர் பெரியவர் பேதங்கள் அற்றவர்
புன்னகை மன்னன் பூவிளிக் கண்ணன்மேல்
பின்வரும் காலத்தில் பித்தனாய் நின்றாரே!

முன்னொன்று பேசியே பின்னொன்று செய்தாரே
முன்னுக்குப் பின்னே முரண்பாடு சரியானதா
என்னத்தைச் செய்தாலும் எம்தமிழ்த் தாயின்
சின்னத்தை மறவாத செந்தமிழ்க் கவியல்லவா!?




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்