தேடிக் கண்டுகொண்டேன்

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

நேரிசை வெண்பா:

தேடியே கண்டுகொண்டேன் தேவதைபோற் சற்குருவை
நாடி நடைமெலிந்து நாற்புறமும்---ஓடியே
வாடி வனப்பிழந்து வந்தேன்யான் ஐயன்முன்
கோடி மகிழ்வடைந்தேன் காண்!

கோடி மலர்தூவி கோபுரத்தைக் கும்பிட்டு
நாடி நமஸ்கரித்து நாற்பொழுதும்---பாடியென்ன
வாடி வறுமையிலே வாழ்விழந்த ஏழைகளை
கூடிப் படிக்கவைத்தார் காண்

பெற்றெடுத்த தந்தைதாயைப் பேணவளி காணாதார்
அற்புதராம்! உத்தமராம்! ஆடம்பரச்---சொற்பொளிவால்
கற்றைப் பணமதனைக் காதலிக்கும் காதகர்
பெற்றோரைப் பேணாத பேய!;

தேடினேன் தேடினேன் தேவதையை நாடினேன்.
தாடி வளர்த்தேன் துறவிகளைக்---கூடினேன்
சாடிக்கு மூடியாயய் சந்தித்தாள் என்மனைவி
வாடிநிற்கப் பாதுகாத்தாள் வந்து!

தேடியே கண்டுகொண்டார் தேம்பியளும் ஏழைகளை
மூடி மறைத்துவிட்டார் முற்றாகக்---கேடிகள்
வாடி வனப்பிழந்து வன்கொடுமைச் சாக்காட்டில்
கூடியே கொன்றுவிட்டார் காண்!

எழுசீர் விருத்தம்:

ளிதந்த தெய்வத்தை ஒருபோதும் மறவாது
       விளிசிந்தி வாடி நின்றார்
உளிகொண்டு சிலைசெய்யும் உயர்வான சிற்பியை
       ஊரெங்கும் தேடி நின்றார்
தெளிவான கவிசெய்யத் திசைகாட்டும் கவிஞனைத்
       தெய்வமே தந்ததம்மா
துளிகூட ஐயமின்றித் துணைவனாய் குமரேசரைத்
       தேடிநான் கண்டு கொண்டேன்!
 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்