ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம்



முறிந்த கிளையொன்றைத்
தாங்கிப் பிடித்தது
மரத்தின் மற்ற கிளைகள்

மாட்டு வண்டியின் ஓட்டத்திலும்
நெளிந்தபடி அறிவுறுத்தியது
அச்சுமுறிந்த சக்கரம்

செருப்பின் சத்தம்
அடையாளப் படுத்தியது
அப்பாவின் வருகையை

கட்டளையின்றித் தவறாமல்
கொட்டிலுக்கு வந்தன
மந்தைவெளி சென்ற மாடுகள்

ஊருக்கே ஒலிஎழுப்பி
அறிவொளிக்கு அழைப்பு விடுத்தது
பள்ளியின் தண்டவாளத் துண்டு

சுத்தம் செய்யாமல் விடுங்கள்
வேர்களுடன் உறவாடுகிறோம்
உதிர்ந்த மலர்கள்

குழந்தைக்கு சோறு உட்டும்போது
தவறாமல் வருகிறான்
கோணிப்பைக்காரன்

யாருமற்றத் தெருவில்
துணையாக உடன் வந்தது
நடுநிசி நிலவு



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்