ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் பாண்டிய ராஜ், திருப்பூர்


விநாயகர் ஊர்வலம்
கடைசிவரை போவது இல்லையே
ஓலை குடிசை

வீதிக்கு வீதி விநாயகர்
வட்டியாவது கட்டீருப்பானா
சிற்பி

ரு வழிச்சாலை
எதிர்திசையில் வேகமாக
வீசும் காற்று

பூக்கள் நிறைந்த மரம்
சட்டென கொட்டும்
ஒரு தேனீ

லமான காற்று
அடியோடு பெயர்ந்து
பறக்கும் பூ

தூரத்தில் வீடு
துரிதமாக அசையும்
சிமிழி விளக்கு

டர்ந்த காடு
இடை இடையே
முறியும் காய்த குச்சிகள்

யாசகன் தட்டை
வெறிக்க பார்த்தபடி
கோபுரத்தின் ஒரு சிலை

முழு அடைப்பு போராட்டம்
நல்ல வேலை விடியும் முன்றதாகவே
விற்றுவிட்டது பால்

யாசகன் புல்லாங்குழல் இசைக்க
தாளம் போடுகிறது
தட்டில் விழும் சில்லரை

குளத்தகரை மரத்தில்
வந்தமர்ந்த மீன் கொத்தி
அழகில் ஒரு முல்

சிறகடித்து பறக்க
கொஞ்சம் சிலிர்த்திருக்குமோ
தண்ணீரின் விளகல்

ணவு போராட்டம்
விடாமல் தொடர்கிறது
மீன் கொத்தி

வப்பெட்டி புதைத்த இடத்தில்
வெட்டியான் செய்த வேலை
மலர்ந்திருக்கிறது பூ

வெட்டியானுக்கு
புது வரவு ஏதும் இல்லை
புதைக்கிறான் ஒரு செடி

வப்பெட்டியை
புதைக்கும் நேரம்
துளிர் விடுகிறது மரம்

லைகளை உதிர்த்து
வரவேற்க்கிறது மரம்
வசந்த காலம்

திகாலை நேரம்
அழகாய் இறங்குகிறது
புல்லில் பனி துளி

ழகான பனி துளி
உடைந்து சிதற
பறக்கிறது சூரியன்

யல் நெடுக்க
வடிந்தபடியே
பனி துளி

தமான தூறல்
விட்டு விட்டு
ஈரம்

காய்ந்ந மரத்தில்
எண்ணில் அடங்கா
பனி பூக்கள்

திகாலை நேரம்
ஈரப்பதமாக இருக்கிறது
பட்டுப்போன மரம்

மூடு பனி
கண்ணாடியை துடைக்க
அழகிய ஓவியம்

ச்சை புல் வெளி
பனி காலம் முழுவதும்
நுனியில் சூரியன்

லைக் குடிசை
நிறைந்து கிடக்கிறது
வடிந்த நீரில் குளம்பு சட்டி

திகாலை நேரம்
அக்கினி வர்ணம் பூசியபடி
குளத்து நீர்
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்