ஹைக்கூ கவிதைகள்

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.



காயமின்றி தப்பி வருகிறது
ஊசி இலைக்காடுகளை
தழுவிய தென்றல்.

விழ்ந்தத் தேர்
மயிரிழையில் தப்பிய இறைவன்
உயிர்த்துறந்த நாதஸ்வர ஓசை.

டுங்குளிர் இரவு
போர்த்திக்கொள்கிறாள் பிச்சைக்காரி
நாய் இல்லாத நேரம்

ருளில் விழுந்து பழகியிருந்தும்
இம்முறை மின்னலுக்காக
காத்திருக்கிறது
இலையின் நுனியில் மழைநீர்

ம்மா இறந்த தினமும்
வாட்டியது வெட்கங்கெட்ட
பசி.

குவிந்தன பெற்றவனுக்கு வாழ்த்துக்கள்.
சிரித்திருந்தான் தூரத்தில்
சிருஷ்டிகர்த்தா.

பாட்டியின் சுறுக்குப்பையில்
காலாவதி ஆகியிருந்தது
புகையிலை நறுமணம்.

ரோஜாவின் கவர்ச்சியை
வெளிக்காட்டியது
முள் கிழித்தப் பனிச்சேலை.

த்துணவை சுவைத்ததும்
வாந்தி மயக்கம் -
சாம்பாரில் வீழ்ந்த பல்லிக்கு.

த்து மீறி ஊருக்குள் நுழைந்து
அமைதியை உருக்குலைத்தது
தொடர் வண்டியின் சைரனொலி.

ழையில் நனைகிறது
காலை ஈரமாக்கிச் செல்கையில்
கடலலை.

திர்ந்த பூக்களை
சுவைக்கின்றன
பட்டாம் பூச்சியின் நிழல்கள்.

ந்தை மறைவுக்கு பின்
தாயை வந்தடையும் இடைவெளியில்.
ஓய்வெடுக்கிறது ஓய்வூதியம்.

 

 





 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்