ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் க.செல்வகுமார், நெய்விளக்கு.



சூரியனைக் கண்டதும் வெட்கமோ
ஓடி ஒளிகின்றாளே.!
பனித்துளி.

துளையிட்டதால் அழுகின்றதோ..
மூங்கில்.
புல்லாங்குழல்!

திரறுத்தபோதும்
போக மனமில்லையோ../
வயற்காட்டில்.
காவல் பொம்மை!

ரே உறங்கும் வேளையில்
கண்விழித்து யாரைத்தேடுகிறாள்.
நிலவு!

ரங்களின் மௌனத்தை கலைத்தது./
கிளைகளை தீண்டி பேசியது.
காற்று!

நீர் உறிஞ்சும் தொழிற்சாலை
வறண்டுபோன வயல்கள்
எழ முடியாமல் விவசாயி!

விற்பனை ஆகாத காய்கறிகள்
விற்பனை ஆயிற்று
சிறுவனின் கல்வி!

 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்