குறுங்கவிதைகள்

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.


டைவிடா நாய்க்குரைப்பு -
மாளிகைக்குள் அச்சத்துடன்
பிரவேசிக்கிறது
முதல் மழையின் துளி.

ளவேனிற்காலம்
மெதுவாக உலர்கின்றன
கார்க்கால ஈரக்காதல் நினைவுகள்.

றங்கும் நிழலுக்கு
பாய் விரிக்கின்றன விழும் இலைகள்-
இலையுதிர்க்காலம்.

டிக்காற்று -
அடித்துச் செல்கின்றன
அஸ்திவாரமற்ற நினைவுகள்.

ொழி பெயர்க்கப்படுகிறது
முதலிரவு அறைகளில்
ஏதேன் தோட்டத்து நிர்வாண உரையாடல்.

சிதறிய சித்திரங்கள்.
சீன நெடுஞ்சுவரை
தழுவிட இயலா ஏக்கம்.

ள்ளிரவிலும் நடை பெறுகிறது
சூரிய வணக்கம் யோகா -
கதிரவன் மறையா நாடுகள்.

ெருமூச்சுடன் கடக்கின்றன
ஐஃபெல் கோபுரத்தை -
சிமெண்ட் பொதியேற்றிய ட்ரக்குகள்.

கிப்தின் பிரமிடுகளை
ஏளனம் செய்யும் ஆன்மாக்கள் -
பயனில்லா பிரேதங்களின் காத்திருப்பு.

ெறி தவறிய வருணன்-
அமேசான் மழைக் காட்டில்
பரவிய தீ.

ென்றலாக உருவாகிறது
சிலுவை கோபுரத்தை தாக்கிய
சூறாவளி.

ள்ளி வாசலில் மூன்றாம் பிறை
யாசகனின் ஓட்டை சட்டைப் பை
விளிம்பில்
ஒற்றை ரூபாய் நாணயம்.

ேசியக் கீதம் இசைத்ததும்
எழுந்து நிற்கிறது பாரிச வாயு
பாதித்தவனின்
மனத்திடம்.

மேலும் வளைக்க இயலவில்லை
தப்பி ஓடுகின்றன கார்மேகங்கள்.
வானவில்.

ூத உடலை சுற்றி
கூடியிருந்தனர் மலர் வலையங்களுடன்
மனிதர்கள்.

டைக்கலம் தேடி ஓடின
பருந்தின் நிழலை புறக்கணித்த
கோழிக் குஞ்சுகள்.

ிறந்த அறைக்கதவு
இருளை பூசிக்கொண்டு அஞ்சி
பின்வாங்கியது ஒளிவட்டம்.

ரி கற்கள் விழுந்து
இடையூறு செய்கின்றன
எண்ணுகையில் விண்மீன்கள்.

ரிக்கரையை கடக்கையில் கேட்கிறது
மின்பிம்பங்களை விழுங்கிய
தவளை சத்தம்.

ிறகின் ஒவ்வொரு அசைவிலும்
ஒரு ஹைக்கூவை உதிர்த்து விட்டு
பறக்கிறது பட்டாம்பூச்சி.

ாயமின்றி வெளியேறுகிறது
ஊசி இலைக்காடுகளை தழுவிய
தென்றல்.

டைவெளி விட்டு தாக்கும் காற்று
அசைந்துக் கொடுக்க மறுக்கின்றன
மேற்குத்தொடர்ச்சி மலைகள்.

டி விளையாடு எறும்பினமே!
இன்னும் காலமுண்டு
பைசா கோபுரம் முழுதும் சாய்ந்திட.

றந்தக் கடலின் மேல்
உதிர்கின்றன
வாழும் பறவைகளின் சிறகுகள்.
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்