மொழிக்குப் பழி வருமா?

பேராசிரியர் இராம.குருநாதன்


காற்றுக்குப் புதிய திசை காட்டிவிடு – வியர்வைக்
கடலில் மூழ்கி முத்தையெடு - தமிழ்
நாற்றுக்கு நன்னீர் ஊற்றிவிடு- தமிழர்
நலமாய் அதன்வழி வாழவிடு

தோள்கள் சுமக்கும் கைகளினால் - பெருங்
தடைக்கல் பாறையைப் புரட்டியெடு - வீர
வாளாய்க் கைகளை நீட்டியிங்கு - உன்
வலிமையை ஒன்றாய்த் திரட்டியெழு

ளிப்பய ணந்தான் உன்பயணம்- உன்றன்
உழைப்பினைக் காட்ட இதுதருணம் - வாழ்வில்
நெளிந்தும் வளைந்தும் கொடுக்காமல்- நீ
நெஞ்சை நிமிர்த்திப் போராடு

தாய்மண் என்ன அந்நியமா? – உன்றன்
தமிழ்மொழி உனக்குப் பகைக்களமா? போரில்
காயப் படாமல் வெற்றிதனை - இங்குக்
காண்பது என்ன சாத்தியமா?

தாய்மடி கிடந்த காலங்களில்- நீ
தவழ்ந்த(து) உனக்கு நினைவிலையா? முதல்
வாய்ச்சொல் பயின்றது தமிழல்லவா? உன்
வாழ்வை வளர்ப்பது அதுவல்லவா?

மொழியை மறந்தால் விழிப்பேது?- இதைநீ
முதலில் உணர்ந்தால் பழிப்பேது? – இரு
விழியை மறந்த இமையுண்டோ!- தமிழின்
விடியற் காலத்திற் கழிவுண்டா?
 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்