பிரபஞ்சன் என்னும் ஆளுமை

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 


ரமற்ற போதும் உயிரற்ற வாறும்
        எழுத்துக்கள் உதிப்ப தில்லை
குரலற்றுப் போகும் கோரிக்கை எல்லாம்
        கொடிகட்டி வருவ தில்லை
வரமற்றுக் காணும் வரலாறு மண்ணின்
        வடிவத்தைச் சொல்வ தில்லை
பிரபஞ்சன் கீறும் புயலோடும் வாழ்க்கைப்
        பிரபஞ்சம் சொல்லும் உண்மை!

னிதத்தின் கூறு வறுமைக்குள் இருப்பு
        மலர்கின்ற வரைகள் எண்ணித்
தனிமத்தின் முறைகள் சமுதாயப் பறைகள்
        தாம்பத்ய வர்க்கச் சிறைகள்
கனிமத்தின் உள்ளே கடவுட்கும் சாதிக்
        கடப்பாடும் தைத்த கணங்கள்
புனிதமும் மதங்கள் புரிகின்ற மாற்றுப்
        பிசிறோடும் ரணங்க ளாமே!

த்துவத்துள் நின்றும் கல்விக்கு என்றும்
        சால்பிட்ட மனிதன் என்பேன்
புத்திக்குள் வெடித்த பொல்லாங்கு எழுத்திற்
        பிறப்பாக்கி வைத்த பொறியான்
நத்தையாய் ஊர்ந்து நாட்டுக்குட் பாய்ந்து
        நரம்பெல்லாம் குருதி வைத்தான்
மெத்தைக்கும் பாயின் விளிம்புக்கும் வாழ்க்கை
        விரசத்தை எழுதுவித் தானே!

போ
ராட்டம் வாழ்க்கைப் புதிராட்டம் பஞ்சப்
        பிடிக்குள்ளும் நெருடல் பார்த்தான்
போரேந்தும் வண்ணம் புதினங்கள் வைத்தான்
        புயல்வாழும் பூமி யாத்தான்
ஏரேந்து மாப்போல் எழுத்தாணிப் போர்வாள்
        எடுத்தானே கரத்தில் என்பேன்
பாரேந்தும் வண்ணம் படைப்பாளி என்ற
        பரிணாமன் பிரபஞ் சனாமே!




 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்