மதிநிறைந்த தைப்பொங்கல்

புலவர் முருகேசு மயில்வாகனன்
 


காலைக் கருகற் பொழுதினிலே கண்விழிக்கச்
சோலைக் குயிற்கூவல் சேவலுமே – காலைக்
கதிரவனின் காட்சி கலந்த பொழுதில்
மதிநிறைத் தைப்பொங்க லே.

ன்றிக் கடனுக்காய் நாம்செய்யும் பொங்கலிது
மன்னவனாம் சூரியனும் மாரியும் – இன்னலுடன்
காராள் கமக்கார்ர் கண்துடைக்கும் பொங்கலிது
பார்சிறக்க வைக்குமிது பார்.

ுற்றத்துப் பொங்கல் முழுநிறைவு பெற்றிட
உற்றார் உறவுடனே ஒன்றுகூடி – நற்றமிழர்
வாழ்வின் நலிவகல நாமிடும் பொங்கலிது
ஏழ்மையிலா வாழ்வுக்கு ஏற்பு.

ரும்பும் இளநீரும் கற்கண்டும் பாசிப்
பருப்பரிசி சர்க்கரை பாலும் – விருப்பான
பொங்கற் பொருளுடனே பானைசட்டி கொள்வனவும்
பங்கமின்றிச் செய்திடும்நற் பாங்கு.
பருப்பரிசி – பருப்பும் அரிசியும்

ீனத்துப் பட்டாசும் சிரிப்பூட்டும் மத்தாப்பும்
ஆனதைப் பொங்கலுக் கற்புதமே – வானமொளிர்
ஆதவன் அன்புகூர் ஆவினங்கள் மாரிக்கும்
பேதமின்றிப் பொங்கும் பொறுப்பு.




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்