தன்முனை (நாநிலு ) குறுங்கவிதைகள்

முனைவர் வே.புகழேந்தி, பெங்களூர்
 

ழை வரும்போதெல்லாம்
வழி மேல் விழிவைத்து.
குடையுடன் காத்திருப்பேன்.
நீதான் வருவதில்லை.

நீ வராத
கார்க்கால சந்திப்பின் போதெல்லாம்
நனைந்துதான் விடுகிறேன்
கையில் இரு குடையுடன்.

கார்க்கால குளிர்
நனைந்தே நடக்கிறோம்
தூரத்து மழை
துரத்துகிறதே பொறாமையால்.

னக்கு குடை விரித்தேனாம்
ஊசியாக குத்துகிறது
உன் பெயர்ச் சொல்லி
ஊமை மழை.

குடையின் பாரத்தை
குறைக்கிறதோ பட்டாம்பூச்சி?
மழைக்காக நீ விரித்ததும்
மேலமர்ந்து வருகிறதே.

மழை நாளிலும்
நம் கரங்கள் இணைவது கண்டு
வெட்கத்துடன்
சற்றே சரிகிறது குடை.

ட்டாம்பூச்சியும் அறிந்துள்ளதை
போலுள்ளதே 'காதலர் தினம்'?
வண்ணங்களை பரிசளிக்கிறதே
உனக்காக காத்திருக்கையில்?

ன்னென்னவோ கேட்க
எண்ணி காத்திருப்பேன்
எதுவும் முடிவதில்லை.
எப்போதும் உடன் வருவதால் நறுமணம்.

கோலத்திற்காக
காத்திருக்கிறது உன் வாசல்.
புள்ளிகள் வைத்துச் செல்லும்படி
தூறலை நான் அழைக்கவா?

னக்குத்தான் யோகமில்லை
என் நினைவுகளையாவது
படுக்கவிடு உன் பக்கத்தில்
பல்லாயிரக் கதை பேசட்டும்.

ற்றையடிப் பாதையில்
ஒய்யாரமாக நீ நடக்கையில்
ஓராயிரம் கவிதை எழுதிடுமோ
உன் கொலுசொலி?

நா-னுனக்களித்த முத்தமின்னும்
நிலு-வையிலுள்ளதே?
கவி-ன்மிகு காரிகையே!
தை-மாதம் அருகாமையில்தான்.

ன்-னிகரற்ற காதலையழிக்க
முனை-வோரின் எண்ணம் பலிக்காது.
க-ண்ணே! காத்திரு காலம் கனியும்.
விதை-யொன்று போட முளையாது சுரை.

சொல்ல வந்ததை விடுகிறாய்.
'ஹைக்கூ'வா நீயென்று,
குழப்பத்துடன் 'கஸல்' புனைகிறேன்
'தன்முனை'யில் நின்று.

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்