மரணத்தை மீட்டெடுப்போம்!

வித்யாசாகர்

இரண்டற கலக்காத நெஞ்சில்
வஞ்சமற்று வாழ்கையில்,

கெடுத்தவனை
திருத்த முயல்கையில்,

அடித்தவனை
திருப்பி அடிக்கவும் -
அணைக்கவும் முடிகையில்,

அன்புருதலில்,

இல்லாதாரிடம்
இருப்பதில் -
இயன்றவரை பகிர்ந்து கொள்கையில்,

இருப்பவரை கண்டு
ஏங்கி நிற்காமையில்,

எத்துணிவு பெற்றும்
பணிவுருகையில்,

பணிபவரை
மதிக்க கற்கையில்,

மதியாதாரை
புரிந்து கொள்கையில்,

தவறென்று கண்டால்
பொங்கி எழுகையில்,

தன் தவறாயினும்
திருத்திக் கொள்கையில்,

எவருக்கும்
அஞ்சாதிருத்தலில்,

எல்லாம்
வெல்லத் துணிகையில்,

எதையும் செய்துதீர்க்க
நம்பிக்கை கொள்ளுதலில்,

தோல்வியின் காரணம்
தானென்று உணர்தலில்,

மீண்டும் மீண்டும்
முயற்ச்சி செய்தலில்,

பிறரையும்
நம்புதலில்,

எவரையும்
துச்சப் படுத்தாமையில்.

வென்றவரை
போற்றி மகிழ்தலில்,

பொறாமையை அறவே அறவே
ஒழிக்கையில்,

போதுமென
நிறைதலில்,

ஏற்றத் தாழ்வினை
ஏற்படுத்தாமையில்,

போதை
ஒழித்தலில்,

பொய்யின்றி
வாழ்தலில் -

உண்மை ஒளிவட்டமாகும்
மரணம் மீட்கப் படும்!

மரணம் போகட்டும்
மனிதமாவது மிட்சப் படும்!



vidhyasagar1976@gmail.com