அன்றிலிருந்து இன்றுவரை...!

கவிஞர்  புரட்சிமானுடன்
 


ரவுரி போர்த்த வையம்
        மாறிவிஞ் ஞானம் கண்டு
தரணியில் வெளிச்ச மேற்றிச்
        சந்திர வெளியில் ஏறிப்
பிரபஞ்சம் நுழைந்த இற்றைப்
        பொழுதிலே நின்றோம் ஆயின்
முரண்என முயலின் கால்கள்
        மூன்றெனக் கத்து கின்றார்!

செம்மொழி தமிழே என்றும்
        திருக்குறள் அமிழ்தே என்றும்
அம்மொழி பலநூ றாண்டின்
       அருள்மொழி என்றும் கண்டோம்!
மும்மையில் இறைவன் ஏட்டில்
       முத்தமி ழரங்கம் போற்றும்
நம்மொழி தன்னைக் கொய்ய
        நமனுமாய்ப் பலபேர் வந்தார்!

பேய்களும் உலவி நிற்கும்
       பூமியின் கதைக ளொன்றித்
தாயவள் மொழியக் கேட்டுத்
       தமிழினைப் புரிதல் கண்டோம்!
தூயவர் நெஞ்சக் கோட்டில்
       தெய்வமே அருளும் பாட்டில்
ஆயதோர் மறைகள் செப்பும்
       அகில்மொழி தமிழைப் பெற்றோம் !

ங்கமாய் முதலும் மூன்றும்
       சார்ந்திடை யொன்று மென்ன
அங்கமாய்ப் பனுவல் காட்டும்
       அறம்புறம் நானூற் றுப்பண்
பொங்குமா வெள்ளம் போன்று
        புத்தகம் தமிழர் சொத்துக்
கங்குலைக் கிழித்த வண்ணம்
       கண்டதே உலகம் அம்மா!

ராவணன் மேலே நீறாம்
       இணையள் மண்டோ தரிக்குப்
பராபரன் சிவனைப் போற்றும்
        பண்பினள் அறத்தி னாளாம் !
பிரான்எனக் கைலை கண்டான்
        பூசிய திருநூற் றானாம் !
தராதரம் சங்கீ தத்தின்
        சங்கரன் இலங்கை மன்னன்!

மிழொரு வேதத் தோட்டம்
       தமிழொரு மறையின் தேட்டம்
தமிழொரு காப்பி யத்தின்
      தமிழழொரு மறையா யாப்பாம்!
தமிழொரு குறளின் கீற்று
       தமிழொரு மரபின் ஊற்றாம் !
தமிழொரு அழியாக் காற்று
      தமிழ்மொழி உலகின் ஊற்றே !

த்தகைக் குணத்தி னாலே
      இப்புவி விளைத்த நங்கை
மத்தியில் உதித்த பெண்ணாய்
      மற்றைபல் மொழிகட் குள்ளாய்
சித்தியிற் கனத்து நின்றாள் !
      சித்திரம் வகுத்து நின்றாள் !
அத்திரத் தாதி யந்தம்
      அணிந்தவள் தமிழே அம்மா !


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்