உழைப்பு உயிருண்டாக்கும்!

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 


 

ழைத்தாலே வருவான் தெய்வ
       ஆண்டவன் உருக்கொண் டாற்;போல்
இழைத்தாலே தடுக்கு ஆகும்
       ஏழ்மையைத் தடுக்கு மாப்போல்
பிழைப்பாலே திருடர் வையம்
       பொறுக்கியே கெடுப்பர் ஆயின்
உழைப்பாலே உலகம் காத்து
       உயர்ந்திட உழவன் வைப்பான்!

முயற்சியே பலனுண் டாக்கும்
       மொய்தரும் வழியண் டாக்கும்
வயற்புரம் வரம்பும் ஏறி
       வணங்கிடப் பயிருண் டாக்கும்;
கயிற்றொடும் தொங்கு மாப்போல்
       கழைக்கூத்து ஆடி நிற்போன்
வயிற்றொடும் காய மாட்டான்
       வரும்பஞ்சம் செயித்து நிற்பான்!

தோல்வியே வருகு தென்று
       திண்ணையிற் தூங்க லாமோ?
மால்விதித் தரத்தே யாறாம்
       மடியில்றொக் பெல்லர் வென்றார்!
சால்விதி யின்றே இல்லாச்
       சரித்திரம் ஒருநாள் மாறும்
நாளெலாம் நேர்மைக் குண்டே
       நயந்திடும் உழைப்பு அம்மா!

குருதியிற் பயிற்று விக்கக்
       கூழ்தரும் திறனே காண்பாய்!
பருதியின் ஒளியில் தானே
       பாரொடும் பூக்கள் ஆக்கும் !
சுருதியிற் கண்ண தாசன்
       செப்பிடக் கவிதை நெய்தான்
உருகிடும் போதி லெல்லாம்
       எனக்கெனத் தமிழே நிற்பாள்!

பாவனம் உளத்தி னாற்போல்
       பயிரொடும் உழவ னாற்போல்
பூவனம் புடவி யாம்போல்
      பேரிறை தோன்று மாப்போல்
தேவனும் வருவான் அந்தத்
      தேரிலுன் வலமுண் டாக்கும்
சாவரும் போதும் உழைப்பே
       சரித்திரம் ஆக்கும் தம்பி!




 

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்