நான் - நீ - தேனீ!

கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு
 


ன்நீயென நல்லெண்ணம் அற்று விட்டு
நாற்புறமும் பகைவளர்க்கும் மனிதா! சற்று
தேனீக்கள் சொல்லித்தரும் பாடம் கேட்டு
திருந்துதற்கு முயற்சிப்போம், வாழக் கற்று!
தேனீக்கள் கொண்டுள்ள றெக்கை ரெண்டு
திசையெட்டும் பறக்கின்ற ஈக்கும் உண்டு!
பூநக்கித் தருகின்ற நன்மை யெல்லாம்
புண்மலத்தை நக்கிடும் ஈ புரிவதுண்டோ?

நோய்பரப்பும் ஈக்களைப்போல் வாழ்ந்திடாமல்,
நோக்கத்தில் உயர்வொழுக்கம் நமக்கு வேண்டும்!
காய்கனிகள் பூவினத்தால் பெறுவதற்கு,
கால்வைத்து மகரந்தச் சேர்க்கை தந்தே,
வாய்முத்தம் வழங்குகின்ற மலர்கள் தொட்டு
வண்டினமாய் தேன்சொட்டு உறிஞ்சக் கற்று,
ஓய்வின்றி அடைக்கூட்டில் சேகரித்து,
உயிர்காக்கும் மருந்தமுதை வழங்க வேண்டும்!

ரைதேடிப் பறந்தாலும் இரண்டும் சொல்லும்
இயற்கைவழிப் பாடமிதை உணர்ந்து கொள்வீர்!
குறைகளைந்து முறையோடு வாழ்வதற்கே,
குறையின்றி ஆறறிவை நமக்களித்த,
இறைபோன்று மறைமதங்கள் நம்பும் நாடு;
எதிர்மறையை விதைப்பதினால் விளையும் கேடு!
நிறைவுதரும் நேர்மறையால் உயர்ந்த எண்ணம்,
நேயத்தை வளர்ப்பதினால் மனிதம் தேடு!
 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்