வாழ்கையை வாசித்தல்

கவிஞர்  நாச்சியாதீவு பர்வீன்
 

இரவின் கிளை நெடுகிலும்
ஊர்ந்து
செல்கிறது மனசு
 

விண்மீன்களின்
பரிகாசச்சிரிப்பில்

வெட்கித்தலை
குனிந்த
நிலவினை
ரசிக்க முடியவில்லை 

ஏகாந்தப் பொழுதொன்றின்
நீட்சியை
வாசித்துக்கொண்டே
பட்சிகளின்
பாடல்களை
ரசித்துக்கொண்டே
எல்லைகளற்ற
வெளிநெடுகிலும்
நிரந்தரமற்ற
இந்த பயணம் தொடர்கிறது 

காற்றின் சோகப்பாடல்
ராகமாய்
வெளியேறுகிறது
புல்லாங்குழலாகமலே
முதிர்ந்துவிட்ட
மூங்கில்களின்
முணங்கள்ஒலி
இருளின்
இடைவெளியை
நிரப்பிவிட்டு
செல்கின்றன. 

அன்றாடங்கள் முடக்கப்பட்ட
தினக்கூலியின்

வயிற்றெரிச்சலை
தெருப்பாடகன்
உரத்து
பாடிச்செல்கின்றான்
 

வாழ்விடமற்று தெருவோரத்தில்
ஆயுளை
கழிக்கும்
மனிதர்கள்

எந்த
ஊரில் போய் அடங்குவது 

ஊளையிட்டு ஓயும்
குள்ள
நரிகளின் ஓலம்
இன்னும்
தொடர்கின்றன 

வைகரையின் ஓரத்தில்
நம்பிக்கையின்
இளம் கீற்றுகள்
தெறித்து
விழுந்தாலும்....
இன்றைய
பொழுது விடிந்து
இப்படியே
கடந்து போனாலும்
நதிக்கரையில்
வாழும்
சிற்றெரும்பு
போல
நம்பிக்கையற்றதாகவே

பிறக்கிறது
புதிய நாளும். 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்