கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
             (13.05.1920 -
04.11.1994)

புலவர்   முருகேசு மயில்வாகனன்


வேளுக்குடி
பிறந்த வேந்தன் குமாபா
ஆளுமை
கொண்டதோர் அயரா உழைப்பாளி
வேளாண்
குடியிலே மாரிமுத்து கோவிந்து
பெற்றெடுத்த
பெருமைக் குரிய மைந்தனிவர்
உற்ற
பொழுதில் உதவிகள் அற்றவராய்
பெற்றதந்த
தாயார் பெருமைபெற வாழ்வை
உற்ற
தந்தை உயிரற்றுப் போய்விடவே
விவசாயம்
, மளிகை, துணிக்கடை வியாபாரம்
அவையடக்கம்
கொண்டதனால் ஆர்வம் பத்திரிகையில்
இறையருள்
சேர்ந்திடவே இணைந்தார், நல்லறிஞர்
நூல்கள்
கற்பதனால் பெற்ற நல்லறிவால்
எழுத்தாளர்
, கவிஞர், நூலாசி யராகி
நுண்ணறிவால்
நுழைந்தார் பத்திரிகைத் துறையில்
தன்மானத்
தமிழனாய் தமிழ்நாட்டில் சிறப்புற்றார்
சினிமா
உலகின் சீர்பெற்ற இயக்குனர்
பாட
லாசிரியர் பண்பான வசனகர்த்தா
என்றுபல
பதவிகளில் பக்குவமாயச் செயற்பட்டே
நல்லபெயர்
பெற்றே நலிவின்றி வாழ்ந்தாரே
அரசியல்
ஈடுபாட்டால் ஐயமின்றிச் செயற்பட்டார்
.பொ.சி. தலைமையிலே மாண்பரிய போராட்டம்
சுயத்தையே
வேண்டிநின்றார் சுதந்திர புருடராக
மாண்டாலும்
மாழாத மாபெரும் சக்தியிவர்
இழந்தோம்
என்றேக்கந்தான் எம்மினத்தின் சோகமிதோ!

          



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்