ந்தக்குரற் கவியரசே சங்கரன்தாள் சாந்தியே!

அருட்கவி ஞானகணேசன்

 

 


அச்சுவேலி யூர்க்கவியே ஆழ்ந்த தமிழறிவே
மெச்சும்
வகையிலே மெட்டெடுத்துக்  கெச்சிதமாய்
சந்தக்
குரலிலே சங்கரன்தாள் பாடிடவோ
முந்தினீர்
அம்பலத்தே மூத்து? 

எத்தனை மேடைகளில் எம்மோ டிணைந்துநீர்
தித்திக்கப்
பாடினீர் செந்தமிழில் வித்தகனே
அத்தனை
பாவகையும் ஆழமாய்க் கோர்த்துநீ
சித்தமொடு
தந்தாய் சிறப்பு! 

மணிமாலை கட்டுவதில் மன்னன்நீ வானில்
கணீரென்று
பாடும் கணேசா பணிமுடித்து
விண்ணகம்
சென்றாயோ வித்தகம் காட்டிடநீ?
மண்ணகம்
மாளுதே மாண்டு! 

எண்பதாம் ஆண்டகவை ஏற்றமாய்க் கொண்டாடிக்
கண்பட்டதோ
அண்ணா? கவிக்குயிலே! - பண்டரங்கன்
உந்தன்
கவிதைகளுள் ஊறிக் கவர்ந்துனக்குத்
தந்தானோ
தன்தாள் தடுத்து! 

இல்லற வாழ்வை இனிதுற வாழ்ந்தெமக்கு
நல்லறப்
பாதையை நாட்டினீர் பல்லரும்
போற்றிட
வாழ்ந்த பெருந்தகையே உன்புகழை
நாற்றிசையும்
பாடும் நனிந்து! 

பொருட்சுவை சொற்சுவை போந்த கவிநூல்
கரும்பாய்ப்
படைத்துக் கலக்கி விருந்தும்
எமக்களித்தாய்
வீரனே! ஏத்தினோம் அண்ணா
அமர்ந்திடு
அத்தன்தாள் ஆர்த்து ! 

செந்தமிழ் யாப்பினைச் சேர்த்துக் கவிதளைத்து
முந்தினீர்
பந்தியில் மூத்துமே சிந்துவாயா
கன்னலெனப்
பாயும் கவிமழைப் பேர்புகழை
பொன்னுலகும்
போற்றும் பொலிந்து! 

பாயிற் கிடந்து படுநோயைக் காணாது
தாயிற்
சிறந்த தயாளனே மாயமாய்
கண்ணிமைக்கும்
காலத்தே காயத்தை நீக்கிநீர்
விண்ணுலகு
சென்றீர் விரைந்து!

சாந்தியைத் தந்தருளச் சங்கரனை வேண்டினேன்
ஈந்தருள்வாய்
ஈசனே எம்பரனே சாந்தமிகு
செந்தமிழ்ப்
பாவலனைச் சேர்த்திடுவீ ருன்பாதம்
வந்தனையோ
டுந்தனுக்கு வாழ்த்து!

 

 

அருட்கவி ஞானகணேசன்

              

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்