பொங்கலோ பொங்கல்

நாகை ஆசைத்தம்பி, கோவை



புது நெல்லு புது நாத்து

பொங்கலுக்கு காத்திருக்குன்னு

ஆடிப்பாடியதெல்லாம்

அந்தக்காலம்,,,

இப்போதெல்லாம்

கழனியை உழுத விவசாயியே

காசுக்கொடுத்து

அரிசி வாங்கி உலை வைக்குமளவுக்கு

உலகத்தை மாற்றிவிட்டார்கள்

கார்ப்ரேட் கைக்கூலிகள்,,,

 

வேளாண் சட்டமென்றுச்சொல்லி

உழுதவனையே உருக்குலைய

வைத்துவிட்டார்கள்

மக்களாட்சியென்று

மார்த்தட்டி சொல்கிறார்கள்

மக்களுக்கு பிடிக்காவிட்டாலும்

மறுபரிசீலனை செய்ய

மறுக்கிறார்கள்

நானே ராஜா நானே மந்திரி- இந்த

மனநிலை மாற

நாமும் போகியோடு

பொங்கல் வைப்போம்,,,

எலவு சம்பிரதாயமுன்னு

ஒன்னு இருக்குல.

              



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்