அவன் வருகை நோக்கிய; கண்களிரண்டு!!

வித்யாசாகர்

தோ இதோ என் கண்ணே என்னைக் குத்துதே
மழை மழை அதன் சாரல் தீயாய் சுட்டதே,
அவன் அதோ தூரம் நின்று கொல்வதேன்
உயிர் உயிர் இருந்தும் இல்லா தானதேன்;

இதழ் வழி ஈரம் வற்றிப் போனதே
இரு விழி திறந்தும் கனவு கொல்லுதே
கணம் கணம் அவனைத் தேடி வாடுதே
கண்ணீர்மட்டும் காதலின்வழியே உயிரைக்கொண்டுச்
செல்லுதே

காற்று வானம் இருந்தும் கண்ணை மறைக்குதே
அவன் பேசும் வார்த்தை ஒன்றைக் கேட்கத் தவிக்குதே,
கல்லில் வடித்த சிலையாய் நானும் ஆனதேன்
மௌனம் உடைக்கா கண்ணீர் பெருகி
நோவதேன்

கண்ணீர் துடைக்கும் கைகளிரண்டை
அவனை நோக்கிக் கேட்கிறேன் -
உலகம் மொத்தம் அவன் பார்வை தெரியும்
இரு கண்களை தேடிப்
பார்க்கிறேன்

காதல் காதல் கொள்ளை நெருப்பாய்
என்னைச் சுட்டுக் கொல்லுதேஅவன்
தொட்டுப் பூக்கும் பூவைப் போலஅவன்
வருகை நோக்கி
வாழுதே

அவன் இதயம் திறந்த கண்களிரண்டும்
மரணம் நோக்கி மூடுதே
மரணம் கடந்தும் மரணம் கடந்தும்அவன்
வருவானென்றே நம்புதே!!



vidhyasagar1976@gmail.com