புகைப்பழக்கத்தை விட்டிடுவீர்
(உலக புகைப்பிடித்தல் எதிர்ப்புத் தினம் 31-05-2017)

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
 

நெருப்புக் கொள்ளியாய் இருத்தி வாய்தனில்
           
நிசித்த மாம்புகை நெடிய பஞ்சினுள்
கருத்த
பாளமாய்க் கனலுந் தீய்ந்திடும்;
           
கருகும் ஈரலின் கலங்கள் செத்திடும்
குருப்புப்
புற்றுநோய் குடந்தை பற்றிய
           
கொடிய தாயுனைக் குதறித் தின்றிடும்
விருப்பங்
கொட்டிய மிதக்குஞ் சாம்பலில்
           
விளைவு சாவென விழுத்துமென்(று) அறிவீர்!

அமெரிக் காவிலோர் வருடஞ் சாவிடும்
           
அனைய இப்புகை அதிக ரித்திடும்
சுமாராய்
ஒன்றரைச் சிதறுங் கோடியாய்
           
சுருட்டும் வெண்புகைச் சிதறி மாய்வராம்
குமிழும்
பூமியில் குவல யத்தொடும்
           
குறிக்கு மித்தினக் கொடுமை யாய்நிதம்
அமிழும்
மானிடா அதிருங் காங்கையின்
           
அனர்த்தம் தந்திடும் அவலம் பாரடா!

சுவாசப் பையினுள் செருகித் தீய்ந்திடச்
           
சுருட்டுக் காந்துவோர் தெரிய மாளுவர்
விவாதத்
தாற்பலர் விளக்கஞ் சொல்லியும்
           
விதந்து ரைத்திட விபரஞ் சாற்றினும்
நிவார
ணங்களின் நிரலை ஓம்பவும்
           
நிகழ்விற் தன்னையும் நிறுத்தும் போக்கிலார்
அபாய
மென்பதை அறியார் முற்றிலும்
           
அருந்து வார்புகை யதனிற் சாவரே!

அயினா மன்றமும் அகிலம் போற்றிய
           
அணியத் தோடுமாய் அறியு மித்தினம்
பயிலும்
வையமாய் பதித்த போதிலும்
           
பருகும் பட்டறி வினதாய் வாரினும்
புயலைத்
தாருமோர் புகையின் வண்ணமாய்
           
பொருமிப் பார்தமின் பொழுதைச் சார்வதே!
இயலக்
காண்பவர் எடுத்துக் கூறிடும்
           
இதுவோர் பொற்தினம் எனவே கூறுவோம்!

 

நிசித்தம்-விலத்தப்பட வேண்டியவை. வாய்ப்பாடு: ஒரு அடியில் 24 எழுத்துக்கொண்டதும் அரையடியில் புளிமா-கூவிளம்-புளிமா-கூவிளம் என வருவதுமான ஒரு சந்தவிருத்தம் எனக் கூறுகிறது இலக்கணம்.   
 
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்