காக்க.. காக்க...

அம்பிகை சண்முகன்

'ஐயோ ஐயோ' என்று
நெஞ்சைப்பிடித்தபடி கத்தும்
அப்பாவுக்கு எப்படி ஆறுதல் சொல்லலாம்...

எங்கள் தாய்மனையைத் தகர்க்கும்
அரக்கர்களின் ஆட்டத்தை எவ்வாறு நிறுத்தலாம்;...

தாய்மனையைப்பிரிந்த துயரம் தாளாமல்
தன்னுயிரையே விட்ட அப்பப்பாவைப் போல
என் அப்பாவும் ஆகாமல் எப்படிக் காக்கலாம்...

நாங்கள் அநாதையாகாமல்
எப்படிப் பிழைக்கலாம்...

அறிக்கை அரசியல்...
அடையாள குந்தியிருத்தல் போதும்
எழுக! குலம் காக்க!!


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்