நெஞ்சிலே இட்ட நெருப்பு

கவிஞர் கந்தஸ்ரீ பஞ்சநாதன்



ன்னை பிதாவும் அரவணைத்து மக்களை
துன்பங்கள் வந்திடினும் தாம்வருந்தி - இன்பமுடன்
தோளிலே போட்டுமே தூக்கி வளர்த்துமே
ஆளியோன் ஆக்கியது அன்பு

அன்பால் வளர்த்த அருமையான பிள்ளைகள்
துன்பமாய் தாயும் தகப்பனும் - இன்னலுடன்
கஞ்சிக்கு மாற்றான் கையேந்துதல் தாமேதன்
நெஞ்சிலே இட்ட நெருப்பு

ஈழநாட்டை ஆண்டகுடி ஈடில்லா வீரக்குடி
சோழமன்னன் வெற்றிவாகை சூடியே - ஊழியான்
கோவிலைக் கட்டியே காத்த தமிழ்குடி
தாயகத்தின் ஆதிக் குடி

வெள்ளையன் வந்தவன் வென்றான் தமிழரையும்
கள்ளநெஞ்சம் கொண்ட கருணையில்லான் - உள்ளத்தில்
ஒன்றும் வெளியிலே ஓநாய்கள் போன்றவரை
அன்றுஒன் றாக்கிவாழ்என் றார்.

சேர்பொன் இராமநாதன் சீராக வாழ்ந்தோரை
ஆர்வமாய் ஒன்றாக்கி ஆண்டமக்கள் - பாரினில்
பஞ்சபாண்ட வர்போல போரிட வைத்தசெயல்
நெஞ்சிலே இட்ட நெருப்பு

சினம்கொண்ட நம்புலிகள் சீறியே பாய்ந்து
இனஉணர்வாய் ஒற்றுமையால் ஈர்த்து  - மனத்தைரியத்
தேசியத் தலைவர் தலைமையில் போரிட்டு
ஆசியும் பெற்றார் இறை.

இலங்கை அரசாங்கம் இந்தியாச் சொல்லை
பலமுறை கேட்டுமே போரில் - வலிமையான
நஞ்சான குண்டை நடுவிலே போட்டசெயல்
நெஞ்சிலே இட்ட நெருப்பு

சுதந்திரம் கேட்டவரை சுக்குநூ றாக்கி
வதைத்து சாகடித்து வன்மைசெய்த--- பாதகரின்
வஞ்சனைச் செய்கைகள் வாழ்ந்தவர் இதயத்தின்
நெஞ்சிலே இட்ட நெருப்பு


ஆளியோன் -ஆள்வோன்,  ஊழியான்- கடவுள்
 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்