மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்!

புலவர் முருகேசு மயில்வாகனன்



ங்கிலாந்து ஒக்ஸ்போட்டில் ஜனவரி பத்தொன்பது
நாற்பத் திரண்டில் நாயகனார் வந்துதித்தார்
கற்றிந்த பெற்றோரின் கனிவான புத்திரனாய்க்
கற்றுத் தேறுங் காலத்தே வந்ததந்த
இயங்கு நரம்பணு நோய்க்கு அஞ்சாதே
மின்சாரக் கதிரையைக் கால்களாய்க் கொண்டே
அஞ்சாதே பணிசெய்த அற்புத மாமனிதர்
இயக்கமே அற்றவரின் ஆற்றலுக்கு உறுதுணையாம்
கணினியூடாய்ப் பேச்சுத் தொகுப்பி செய்பணியே
எஞ்ஞான்றும் துஞ்சாது ஏற்றபணி செய்துவந்தாய்
இயக்க மில்லா திருந்தாலும் தன்பணியைத்
தயக்கமின்றிச் செய்தே தரணியில் உயர்ந்துநின்றார்
அண்ட வியலுக்காம் கோட்பாட்டை ஆக்கியே
குவண்டம் இயங்கியல் விளக்கத்தின் ஆதரவாளா
பல்கலைக் கழகத்தின் பேராசி ரியராய்ப்
பல்லாயிர மாணவரைப் பக்குவமாய்ப் பயிற்றியே
நல்லதோர் பணியை நன்றாகச்செய்துசென்றாய்
உன்பணிக்கு நிகராக ஊன்றுகோல் யாருளரோ
ஆக்கிங் கதிர்வீச்சு ஆக்கிங் தேற்றங்கள்

பெற்றாய் விருதுகளே பற்பலவே உன்திறனால்
வற்றாத ஊற்றாக வலம்வந்து சென்றாயே
பற்றுடனே பணியாற்றி எழுபத்தா றாண்டின்பின்
இவ்வுலகை விட்டே இறையடி சேர்ந்தாயே.

பிறப்பும் இறப்பும் பிரியாதென் றொன்றே
அறவழி யாளர்கள் அன்றே சொன்னார்கள்
சிறப்புடன் வாழ்ந்தே சீராகச் சென்றஎம்
திறமைசேர் உறாகிங் திரும்பி வருவாயோ.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்