காலத்தை வென்ற கவி

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

(கலிவெண்பா)

ரின் மிகஇடுக்கில் ஒற்றுமையே இல்லாத
மாரிப் பெருமழையின் வாய்க்காலில் மண்தவளை
கத்திக் குளறிக் கரையும் இருட்டினிலே
சித்தம் கருகிச் சிலம்பஞ் சிலம்பி
நுணலும் பெருவாயால் நோயாய் அலம்பித்
தணலாய் வதையாகும் தாங்காப் பொழுதுஇதில்
நீரோடை முட்டி நிலமுங் கரைந்தோடும்
வாரோடை கண்டு வயப்புதித்த பூங்கவிஞர்
சீலமும் பாடித் திருப்பாடல் ஆர்த்திடுமாம்
காலத்தை வென்ற கவி!

ம்பனும் பாரதியும் காளி தாசனுமாய்ச்
செம்பருத்திப் பூவின் சிகப்புக் குருத்தியலின்
கண்ணதாசன் வாலி கடவுள்மன் வள்ளலார்
எண்பா ரதிதாசன் இன்னும் மணிப்புலவர்
நால்வர் திருமறையின் நாதங் கலந்துவரும்
போல்வார் பல்லோர் பிரபஞ்சத் துள்வளரும்
செந்தமிழின் மூத்த திருக்கோலப் பாட்டெழுதி
வந்த புலமை வரைஞர் உளங்கீறிச்
சீலமும் பாடித் திருப்பாடல் ஆர்த்திடுமாம்
காலத்தை வென்ற கவி!

செந்தமிழும் வண்ணச் சிலம்பாடுங் கண்ணகியாள்
அந்தமிலாத் தெய்வ அருங்குணத்து மாவிதியாய்
நின்ற உலகீதில் நெட்டுரைத்த மன்கொடுமை
வென்ற விதியுலகை மீட்டுரைத்த வண்ணம்
புகழேந்தி, கிரியாரும், பொன்னார் மணிவாசன்
அகமேந்திப் போந்த ஒளவையார் பட்டினத்தார்
வள்ளுவனார் இன்னும் வரும்புலவர் ஈழத்துக்
கொள்ளையிடும் வண்ணக் கூர்ங்கவிஞர் ஆயிரமாய்ச்
சீலமும் பாடித் திருப்பாடல் ஆர்த்திடுமாம்
காலத்தை வென்ற கவி!





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்