சிங்கப்பூர்  சீனக்கவிதைகள்

தமிழில்: ஜெயந்தி சங்கர்

பேருந்தில் 

        -- தூ நான்பா

பேருந்திலேறி
இருக்கை
தேடி
இருந்தோ
நின்றோ

இடம், வலம்,
முன்னால்
, பின்னால்
எல்லாம்
சகபயணிகள்
.
எனினும்
,
அந்நியர்கள்
.

காலையில்
அல்லது
மதியத்தில்
எமது
இருப்பின்
மதிப்பு
வெறும்
ஒரு
டிக்கெட்டு

பெரிய காரண
காரியங்கள்
வேண்டாம்
அடுத்த
நிறுத்தத்தில்
இறங்கவா
வேண்டாமா
என்றெல்லாம்
தீர்மானிக்க
,...

(ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: Ho Chee Lick)

நகரம்
           --- வூ
மூ

விழிக்கிறது
நகரம்
தன்
இனிய
கனவிலிருந்து
அதிகாலையில்
மஞ்சள்
தெருவிளக்குகளோ
கண்களைக்
கசக்கி
தூங்கி
வழிகின்றன
தாழ்வாரக்
குழல் விளக்குகள்
அடுக்கு
மாடிக் கட்டட
உச்சியிலிருக்கும்
சிவப்பு
விளக்கு
மற்றும்
பல
நியான் விளக்குகள்
பிரகாசமிழக்கின்றன
சூரியன்
மேலெழுந்திட

சீராக்கப்படும்
மாடிவீடுகள்
ஐந்தாண்டுக்கொரு
முறை
விதைக்கப்படுகின்றன
வீட்டுவசதிவாரிய
அடுக்ககங்கள்
நிலத்தின்
கடுமையை
துளைத்து
துவங்கும்
பைலிங்
பணிகள்
உரத்த
ஓசையுடன்

இந்த அமர்களத்தில்
சேர்ந்து
கொள்வர்
சாலைப்பணியார்கள்

தயாராகின்றன
பறவைகள்
விளக்கணைந்ததும்
பாட
ஊடறுக்கின்றன
மரக்கிளையிலிருக்கும்
அவற்றின்
மென்னுடல்களில்
பொறுமையற்ற
ஓசைகளும்
நிற்காத
சத்தமும்

அதோ, அங்கே
ஓதுகின்றனர்
நம்
இந்தியச்
சகோதரர்கள்
மேளச்
சத்தத்துடன்
இவ்வதிகாலையில்
உரக்க
பேசுகிறார்
யாரோ
கடைசி
அஸ்திரமாக
சமூக
மன்றத்தின்
மூலையில்
ஆசியக்
கலாசார
விழுமியங்கள்
குறித்தும்
இந்த
நகர
மயமாக்கலை
எதிர்த்தும்

(ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: Bao Zhiming)


மிச்சங்கள்


        --- லியூ
ரியூஜின்

போனது
குழந்தைமை
சூரியனுக்கான
தேடலில்
மீதமுண்டு
உடைந்து
போன பகுதிகள்
மட்டுமே
ஆசையாய்
விளையாடுகிறான்
ஓடையின்
ஓரத்தில்
இன்னமும்
மீனுடனும்
நெத்திலியுடனும்

வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமே அறியுமோ
பூக்களினூடே
கவலையற்று
திரிதலின்
உல்லாச
உணர்வுகளை

(ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: Ho Chee Lick)
 

jeyanthisankar@gmail.com