சாயாவனம் கந்தசாமி சாயமாட்டான்

ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்




சாகித்யக்  கலைக்கூட விருது பெ
ற்றசாதனையின்
எழுத்தாளர் கந்த சாமி
சோகமுறும்
படியின்றே பிரிந்தார் மண்ணின்;
சேர்சாயா
வனமென்ற சிறந்த காதைத்
தாகமுறும்
படியாக்கித் தமிழ கத்தைத்
தகர்த்தவொரு
சிற்பியவன் சாய்ந்தார் அம்மா
மோகமொடும்
இயலோடும் முடிச்சுக் கோர்க்கும்
முத்தமிழின்
பேரெழுத்து மறைந்த தாமோ? 

கருவிழியிற் சிக்கியதும் காற்றின் ஊடும்
கண்டவற்றைக்
கருவறையின் கலங்கள் ஆக்கித்
தெருவிளக்குத்
தேசமொடும் சிற்பங்; கற்றுச்
சித்தரித்த
ஆவணத்தின் திசைகள் கண்டார்
தருக்கொண்டு
ஆர்த்தபெரும் தரணி யாக்கித்
தடையெல்லாம்
உடைத்தமுழுச் சமுதா யத்துட்
சுருக்கென்று
தைத்தமனச் சீலம் பாடிச்
செம்பவளத்
திருநாடு திரும்ப வைத்தார் ! 

இருவிழியும் தெரியாத இறுதிப் பாங்கும்
ஏட்டினிலே
எழுதுவிதி இழந்தார் இல்லை
கருதும்கோள்
விமர்சனங்கள் கணிப்பும் சாரக்
களமோடும்
நூலகத்தின் கருத்தும் சேர்த்தார்
விருதோடும்
பலர்வந்து விழுங்க நின்ற
வேளையிலும்
கலையினிலே விழுந்தார் இல்லை
திருவோடு
செருவென்று திகழும் ஆற்றல்
சிக்காத
விழியினிலும் சிக்கிற் றாமே! 

கலைவாழும் தமிழ்நாட்டைக் கவர்ந்த பெம்மான்
கானலிலும்
எழுதிவைத்துக் காட்டும் செம்மான்
அலைபாய
இருள்மடியில் வெளிச்சம் ஆக்கி
அதர்பாய
வைத்தவனே எண்ப தாக்கி
வலைபாய
வந்தவனின் மடிக்குள் வீழ்ந்தான்
வையகத்தை
முடித்தானோ இல்லை இல்லை
தொலையாத
வாசகத்தில் திரட்டிக் கோர்த்த
சிற்பமெலாம்
சாயாத வனமென் றானான்!







  


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்