நூல் : இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய் (கவிதை நூல்)
நூல்
ஆசிரியர் :
 யோ.புரட்சி
நூல் அறிமுகம்:
.எலிசபெத் தலவாக்கலை
 

லகில்தளராமல் நடைபோற்றுக்கொண்டிருக்கும் பாதங்களோடு இன்னுமிரு கால்கள் சேர்ந்துகொள்கின்றது. வள்ளுவர்புரம் முல்லைத்தீவிலிருந்தே இப்பயணம் புறப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகமான வாசகர்கள், எழுத்தாளர்களால் அறியப்பட்ட இளம் எழுத்தாளர் யோ.புரட்சி அவர்களுடையதே அக்கவிப்பாதங்கள். பெயருக்கேற்றாற்போலவே அவரது படைப்புக்களும் புரட்சியினை செய்வதற்காய் புறப்பட்டுள்ளது என்பதனை இந்நூலை வாசித்து முடித்த அனைவரும் சொல்லிடுவார்கள் என்பது நிச்சயம்.

ஐம்பது கவிதைகளுடன் அடக்காமான இக்கவிதை நூல் யதார்த்தமான போலியில்லாத முக அட்டையை பெயருக்கு ஏற்றாற்போல தாங்கிவந்திருப்பதும் பின்னட்டையில் நூலாசிரியரின் படமும் அற்புதமாக அமைந்திருக்கின்றது. இதுபோல இன்னும் பலபுதுமையான வித்தியாசமான விடயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதை தெரிவித்தேயாகவேண்டும். நூலில் மட்டுமல்ல வெளியீட்டு நிகழ்வுகூட வேறுபட்ட முறைமையிலேயே இடம்பெற்றது அதாவது வழமையான மண்டபத்தினுள் சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், மரத்தடி நிழலில் நூலின் முகப்புக்கும் தலைப்புக்குமேற்றாற்போலவே நிகழ்ந்துமுடிந்தது. ஆசிரியர் வித்தியாசத்தை விரும்புபவராகவும் தனித்துவத்தை நீரூபித்துக்காட்ட முனைபவராகவும் இத்தொகுப்பினூடக அறிமுகமாகின்றார்.

ஆசியுரையை யோ.புரட்சி அவர்களின் தாயார் தன் கையெழுத்திலேயே வழங்கியிருப்பது நூலின் கனதியை அதிகப்படுத்தியுள்ளதோடு அணிந்துரையை வழங்கியுள்ள இந்திய எழுத்தாளரான அறிவுமதி அவர்களின் கையெழுத்தோடு பதிவாகியிருப்பது சிறப்புபெறுகின்றது. அதுபோல அந்தனி ஜீவா ஐயா அவர்கள் கவியையும் ஆசிரியரையும் வியந்து வாழ்த்திய வாழ்த்தும் இடம்பெற்றிருக்கின்றது.

மலையக வெளியீட்டகத்தால் 30.05.2013 அன்று வள்ளுவர்புரத்தில் வெளியிடப்பட்ட 'இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' நூலில், முதலாவது தலைப்பாக 'விளக்குமாறு' என்ற கவிதை வரவேற்கின்றது. ஒதுக்கிவைக்கும் விளக்குமாற்றினால் முதற்கவிதையினை அழகுபடுத்தியிருப்பது ரசனை.
    
தன்னையே அசுத்தமாக்கி
பிறர்மனையை அழகு ஆக்கிடும்
அற்புத மனசு அதற்கு
'

என்று கவிஞருக்கே உரித்தான கல்லைக்கூட கதாநாயகனாக்கும் திறமை ஆங்காங்கே சில தலைப்புக்களில் மிளிர்ந்தாலும் பெறும்பாலான எல்லா கவிதைகளும் நிஜங்களையும் வலிகளையும் இயல்புமாறாமல் அப்படியே ஒப்பித்திருப்பது வாசிப்பு ரசனையை பெருகேற்றுகின்றது. உங்களையும் என்னையும் ஒருகவிதையிலேனும் காண்டுகொள்ளக்கூடியதாய் அமைந்திருப்பதானது கவிஞர் சகலதளங்களிலும் நின்று உணர்ந்திருப்பதில் வெற்றிபெறுகின்றார்.

'
குடையின் அழுகை' என்ற தலைப்பில் குடைபற்றி பேசுகின்ற கவிஞர், வெயில் மழைக்காலங்களில் அதனுழைப்பை கூறிபடி நாம் சிலநேரங்களில் முகஞ்சுழிக்கும் விடயத்தினை இப்படிக்கூறுகின்றார். உண்மையில் நாணக்கூடிய விடயமொன்று

'
இப்போ
மாலைப்பொழுதுகளிலும்
வேலைசெய்கின்றோம்
காதல் லீலைசெய்யும்
காதலர்க்கு
மறைவிடமாக
'

துபோன்று சமூகத்தில் காணுகின்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் மனித உணர்வுகளையும் கவிஞர் தொட்டுக்காட்டியுள்ளார்.

நான் ஏலவே கூறியதுபோல ஏனைய நூல்களிலிருந்து இப்புத்தகம் வேறுபட்டிருப்பதற்கு உதாரணமாக இவற்றைக்கூறலாம், அதாவது தான் எந்தக்காலப்பகுதியில், எச்சந்தர்ப்பத்தில் கவிதைகளை எழுதினேன் என்றும் கவியை வியந்து விமர்சித்துள்ள வாசக எழுத்தாளர்களின் கருத்துக்களையும் கவிதை உருவான நிலையினையும் கவிதை வெளிவந்த ஊடகங்களின் பெயர்களையும் கூறியிருப்பது உண்மையில் வித்தியாசமான பாணியே.

கடந்த காலங்களில் தமிழர்களின் மனதில் வடுக்களாய் பதிந்த் காயங்களின் பிரதியும் பல்வேறுவித பாதிப்புக்களையும் ஒவ்வொரு கவிதைகளிலும் தொட்டிருக்கின்றார் கவிஞர். இதனை 'சேருமா? சேராதா?' மரணவே
லிக்குள் மாட்டிவிட்ட தோழிக்காய், ஏழ்மையின் வீடு, காணாமல் போனவன், உயிரற்ற உயிரின் உருகல், அன்னை ஒருத்தியின் அந்தநாள் தாலாட்டு, போன்ற தலைப்புக்களில் காணலாம். 'சேருமா சேராதா' என்ற கவிதை கவிதையில், காணாமல்போன மகளின் ஏக்கமாக வெளிப்பட்டுள்ளது

இருப்பாயா
இல்லாமல் இருப்பாயா
ஏதுமே தெரியாதபோதும்
இருக்கின்றாய் என்று
சொல்லுகின்றோம் வாழ்த்து
இறைவா எம்மகளை
வைப்பாயா சேர்த்து
... '

என ஒருதாயின் ஏக்கத்தை கண்ணீர்ப்புலம்பலை வலிகள் சொட்ட வடித்திருப்பது மனதிற்குள் சோகமொன்று ஊடுருவுவதை தவிர்க்கமுடிவதில்லை. 'காணாமல் போனவன்' என்ற கவிதையும் காணாமல்போன மகனின் ஏக்கமாக வேதனையாகவே சொல்லப்பட்டிருப்பது ஒரேவிதமான உணர்வினையே ஏற்படுத்துகின்றது.

ஒரு படைப்பாளியை இணங்காண்பதும் அவனை படைப்பாளியாக வெளிக்கொண்ர்வதும் வாசகனுடைய கைகளிலில்லை அது ஊடகங்களினுடைய கைகளிலேயே இருக்கின்றது என்பதனை எவரும் மறுக்கமுடியாது. அந்தளவுக்கு சாதாரண ஒருமுயற்சியாளனை 'படைப்பாளி' என்ற அந்தஸ்தினை வழங்கக்கூடிய தகுதி ஊடகத்திடமே காணப்படுகின்றது அதனை இந்நூலில் தெளிவாக காணமுடிகின்றது எப்படியெனில், தனது ஒவ்வொரு கவிதையும் வெளிவந்த ஊடகத்தைனை குறிப்பிட்டதுபோல அதனை ஊக்கப்படுத்திய வரிகளை குறிப்பிட்டதுவே அதுவாகும்.

கலைஞர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைத்தகைமைகளில் ஒன்றான பரந்துபட்ட சமூகப்பார்வை, சிந்தனை கவிஞர் யோ.புரட்சி அவர்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. 'கொழுந்துகூடை பேசுகின்றேன்' எனும் கவிதையில் கொழுந்துபறிக்கும் ஒரு பெண்தொழிலாளியை கதாநாயகியாக்கி கொழுந்துகூடை பேசுவதாய் புனைந்த வரிகளில் அவளின் அன்றாட பிரச்சனைகள் முதல் அழியாத வேதனைகள் என அத்தனையும் வெளிப்படுத்தி இவ்வாறு துன்பப்படுகின்றார் கவிஞர்.

"
பித்தளை தோடுதானும்
சுமக்காத காது
எத்தனை சுமைதாங்குகிறாள்
இந்த மலைமாது
"

காதல் பாடா கவிஞனுமில்லை கவியில் வரா காதலுமில்லை எனுமளவுக்கு கவியோடு காதலும் காதலோடு கவியும் பிணைக்கப்பட்டிருப்பதை இன்னுமெவரும ்பிரித்தெறிந்திடவில்லை. கவிஞர் யோ.புரட்சியும் காதல் வரிகளை வனைந்திருக்கின்றார் ஆனாலும் அவை வெறும் பெண்ணழகை வர்ணிக்கும் உருகுதலாக இல்லாமல் நேசத்தை வெளிப்படுத்தும் நிஜங்களை பிரதிபலிக்கும் யதார்த்தத்தை மொழிபெயர்க்கும் விதமாக அமைந்திருப்பது ரசிக்கச்செய்கின்றது.

கைபேசி மட்டுமே எம்
காதல்கதை அறியும்..... என தொடர்ந்து

'
யாரோ ஒருத்திக்கு
தாலி கொடுத்தாய் நீ
அன்னை காட்டியவனுக்கு
கழுத்து நீட்டினேன் நான்
இப்போது பேசுகின்றோம்
இந்த உறவுக்கு நாமிட்ட பெயர்
நட்பு
'
 
என்று உண்மைபேசுகின்றார் கவிஞர். எத்தனையோ பேர்களுக்கு வாய்வரை வராத சேதி மனதோடு தம்மை கண்டுகொள்வதற்காய்.

இதேபோல பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பெண்களின் உணர்வுகளை உணர்ந்து பேசுகின்றார். எந்த ஒரு பெண்ணும் உலகமே இழந்துபோனாலும் வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவனை மட்டும் பங்குபோட்டுக்கொள்ளவோ இழக்கவோ எச்சந்தர்ப்பத்திலும் இணங்கமாட்டாள் அவன் ஒன்றுக்கும் உதவாதவனாக இருந்தாலும். அதனை வரிகளில் இப்படி அழகாக்குகின்றார்,

'
உன்னிடம் தங்கத்தாலி
கேட்கவில்லை
கூந்தலுக்கிட
மல்லிகைப்பூ கேட்கவில்லை.... என்று

காதல்பாவம்
கன்னியிவள் செய்தேன்
கல்யாணபாவத்தையும்

தொடர்ந்துசெய்தேன்... என கணவனின் துரோகத்தை தாளாத ஒருத்தியின் குரலாக ஒலிக்கின்றது. இதுபோன்ற காதல்கவிதைகளில் பெண்வாசகர்களின் ஆதரவை பெறுவது நிச்சயம் ஏனெனில் பெண்களின் ஆழ்மனது நினைப்புக்களை படித்திருப்பதேயாகும். 'கானல் மனைவி' என்ற கவிதையும் தாலிகட்டிய மனைவிவிருந்தும் தவறான உறவை நாடிச்செல்லும் கணவனை நினைத்து வடிக்கும் கண்ணீராக, அவனது மனதில் இன்னொருத்தியின் நினைவு இருக்கிறதென்று தெரிந்தும்,

மனைவியாய் வேண்டாம் உன்
கண்ணீரைத்துடைக்கும்
கைக்குட்டையாய் தானும்

இவளை வைத்துக்கொள்வாயா' என்று கேட்கும்போது கணவன்மீது கொண்டுள்ள அன்பும் தாலியின்மீது வைத்திருக்கும் மதிப்பும் திருமணச்சிறையின் இயலாமையையும் காணமுடிகின்றது. எத்தனையோ பெண்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பலதலைப்புக்களில் பொதிந்துகிடக்கின்றது.

தாய்மை போற்றும் கவிஞர், அவரின் தாயாரையே நாயகியாக்கி அவரின் புகைப்படத்துடன் பெயரையே தலைப்பாக்கி கவிபுனைந்த கவிஞரை பாராட்டாமல் இருக்கமுடிவதில்லை. எல்லா பிள்ளைகளும் தம் பெற்றோரை இப்படி நினைத்து மதித்தால் இவ்வுலகில் முதியோரில்லங்களேது வீதிகளில் மனநோயாளிகளாய் யாசகர்களாய் மனிதர்களேது? நிச்சயம் இதனை வாசிக்கும் ஒவ்வொரு பெற்றாரும் தம்பிள்ளைகள் இப்படியிருக்கவே வேண்டுவர் என்பதில் ஐயமில்லை. ஏழைத்தாயின் உழைப்பை பாசத்தை தியாகத்தை நெகிழும் வரிகளை குறிப்பிட்டுச்சொல்லமுடியவில்லை ஒவ்வொரு வரிகளுமே அற்புதம்.

ஏலவே கூறியதுபோல பலருடைய வாசக கருத்துக்களிலிருந்து பதமான ஒரு கருத்தை கூறிடலாம் சந்தக்கவி கிண்ணியா அமீர அலி அவர்கள் 'வள்ளுவர் தந்த   திருக்குறளே பெரும்புரட்சி இங்கே வள்ளுவர்புரத்திலே ஒரு புரட்சி' என்று அர்த்தம் பொதிந்த வாழ்த்துக்களை மிகைத்து மகிழ்கின்றார். இதனை வாசகர்கள் நாமும் பகிர்ந்து பங்குதாரராகிடலாம். அற்புதம் எல்லா கவிதைகளும் ஆழம் அதுபோல தன்னிடைய வாசகி ஒருவரின் கடிதத்தையும் பிரசுரித்திருப்பதும் குறிபிடத்தக்கது. இதுபோல இன்னும் பல சுவாரஸ்யங்கள்.

இக்கவிநூலில் 'ஒரு பாடற்பூ மலர்கின்றக்து' எனும் தலைப்பில் பாடலொன்றும் மணம்வீசுகின்றது. காதல்கொண்ட ஓர் ஆணின் கண்ணீர் வரிகளாக கடைசிப்பக்கத்தினை நனைத்திருக்கின்றது. அத்துடன் பட்டாம்பூச்சியாய் ஆங்காங்கே பொதிந்த அத்தனை கவிதைகளும் அற்புதமானவை.

'
முக்காற்பகுதி தண்ணீரால்
மூடியிருக்கின்ற பூமி
நாங்களோ குடங்களோடு
வரிசையில்
'
  
எனும் ஹைக்கூ நிறைவு பெறாத எத்தனையோ விடயங்களை தாங்கிநிற்கின்றது. நாம் காணுகின்ற கேட்கின்ற அநுபவிக்கின்ற எத்தனையோ விடயங்களை உணர்ந்து உருவாக்கியிருப்பதில் கவிஞர் வெற்றிபெற்றிருக்கின்றார். வாசிப்புத்தேடலோடு வருகின்ற எந்த ஒரு வாசகனையும் ஏமாற்றாமல் ஒவ்வொரு பக்கத்திலும் சுவைகளையும் தேடல்களையும் பிணைத்து கவியோடு மனதை இணைத்துவிட்டிருக்கின்றார் கவிஞர். வசையாய் வந்துபோகும் இக்கால கவிதைகளின் வரிசையில் மனதை அசைக்கும் கவிகளைக்கொடுத்து வாசக உள்ளங்களில் பசையாய் ஒட்டிக்கொள்ளும் நூலாக ' இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' கவிதைத்தொகுப்பு வெளிவந்திருப்பது பாரட்டக்கூடியது.

இதுபோல நல்லாக்கத்துடனும் பலபுதிய திறவுகோலுடனும் இலக்கிய வானில் கவிஞர் யோ.புரட்சி சிறகடிப்பார் என்ற நம்பிக்கையையும் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பகர்ந்தவண்ணம் விடைபெறுகின்றேன் நன்றி!.


நூல்:                            'இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்கவிதை நூல்
ஆசிரியர்:                  யோ.புரட்சி
விலை:                       240/=
தொடர்புகளுக்கு:    வள்ளுவர்புரம்
                                     
விசுவமடு
                                     
முல்லைத்தீவு.
                                      puratchi2100@gmail.com