நூல் : எல்லாமே இலவசம்
நூல் ஆசிரியர் :
 பாரதி சின்னசாமி
நூல் அறிமுகம்:   கவிஞர் நாகை ஆசைத்தம்பி


ல்லாமே இலவசம் என்றதுமே இதுயென்ன திருவாரூர் இடைத்தேர்தலுக்காக ஆளும்கட்சி செய்யும் தந்திரமோ என நினைக்காதீர்கள் நமது மக்களின் பொருளாதாரத்தை சீர்செய்யவந்திருக்கும் அற்புதமான படைப்புதான் எல்லாமே இலவசம் என்ற இந்த நூல்.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் நீ அரிசி கொண்டு வா,,,  நான் உமி கொண்டு வரேன் இருவரும் கலந்து ஊதிஊதி தின்னலாமென்று அப்படிப்பட்ட சுயநலம் விரும்பிகளை புறம்தள்ளி எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்ற பொது நலத்தோடு ஊர்க்கூடி தேரிழுக்க நம்மை உற்சாகப்படுத்த வந்திருக்கும் நூல்தான் எல்லாமே இலவசம் ஆனால் நூல் இலவசமல்ல....

இந்நூல் சுய உதவி குழுக்களின் செயல்பாட்டால் பொருளாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தமுடியும் என்பதை பல விளக்கத்தோடு எடுத்துச்சொல்கிறது கிராமத்திலுள்ள மக்கள் ஒரு குழுவாக சேர்ந்து காய்கறி தோட்டம் அமைத்து தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துக்கொள்ளமுடியும் என்பதையும் அதனால் பொருளாதார பிரச்சனைகளை மட்டுமல்ல தீண்டாமையையும் ஒழிக்கமுடியும் என்பதை சான்றோடு விளக்கியிருக்கிறார் காய்கறியில் தொடங்கி பிறகு படிப்படியாக எல்லா பொருள்களுமே இலவசமாக பெறமுடியும் என்பதை ஆதாரத்தோடு சொல்கிறார்

நூலாசிரியர் தன் பொருளாதாரத்தை சரிசெய்ய எழுதிய நூல் அல்ல எல்லாமே இலவசம்,,,, இச்சமூக பொருளாதாரத்தை சரிசெய்ய எழுதிய நூலாகும் இந்நூலில் காந்தியடிகளின் கிராம தன்னிறைவும் மார்க்ஸின் பொதுவுடமை சிந்தனையும் அம்பேத்காரின் சாதி ஒழிப்பு சிந்தனையும் சேர்ந்தே அழகாக உலா வருகிறது.

இந்நூலை கவிஞர்கள்,எழுத்தாளர்கள் கட்டுரையாளர்கள் என பிரித்துப்பார்க்காமல் அனைத்து தரப்பினரும் இச்சமுகத்தை நேசிக்கும் அனைவரும் வாங்கி வாசித்து பயன்பெற வேண்டிய நூல்.

வாய்ப்பு கிடைப்பவர்கள் வாங்கி வாசிக்கலாமே.
 



 

எழில்மதி பதிப்பகம், கோவை
பக்கம்:188
விலை:120.00

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்