நூல் : இறகைத் தேடும் சிறகுகள்
நூல் ஆசிரியர் :  நாகை ஆசைத்தம்பி

நூல் அறிமுகம்:  கவிதாயினி
ரேவதி, சென்னை
 

உலகளவில் ஹைக்கூ கவிதைகள் பரவலாக பேசப்படுகிறது எழுதப்படுகிறது என்றாலும் தமிழக கவிஞர்களை ஹைக்கூ கவிதைகள் காதல் செய்ய வைக்கிறது என்றால் மிகையாகாது ஏகப்பட்ட கவிஞர்கள் ஹைக்கூ எழுதிவருகிறார்கள் புத்தகங்களும் எழுதி வருகிறார்கள் அதில் குறிப்பிட்ட சிலரே சாதனை செய்து வருகிறார்கள் அந்த வரிசையில் இடம் பிடிப்பவர் நாகை ஆசைத்தம்பியும் ஒருவராவார். 

இந்த நவம்பார் மாதம் நாகை ஆசைத்தம்பி அவர்களின் wing seeking feathers (இறகைத் தேடும் சிறகுகள்) என்ற பன்மொழி ஹைக்கூ நூல் தமிழ் ஆங்கிலம் இந்தி மலையாளம் என்ற நான்கு மொழிகளில் வெளிவந்திருக்கிறது என்பது ஹைக்கூ கவிஞர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி என்றாலும் தமிழ் ஹைக்கூ உலகில் இது ஒரு சாதனை முயற்சியே நான்கு மொழிகளில் வெளிவந்திருக்கும் முதல் நூல் என்ற பெருமையை இந்நூல் பெறுகின்றது

கடந்த அக்டோபர் மாதம் கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் LET HAIKU BLOSSOM (மலர்க ஹைக்கூ) என்ற ஒரு நூலை வெளியிட்டார் அந்நூல் மூன்று மொழிகளில் (தமிழ் ஆங்கிலம் இந்தி) வெளிவந்திருக்கிறது

இந்த இரண்டு நூல்களுமே ஹைக்கூ உலகிற்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் மகுடம் சேர்ப்பதாக வந்திருப்பதில் இலக்கிய உலகம் பெருமையடைய வேண்டும் இதுப்போன்ற சாதனைகளை பல ஹைக்கூ கவிஞர்கள் படைத்து ஹைக்கூ கவிதைகளை உலகளவில் எடுத்துச்செல்வார்களென நம்புகின்றோம். 

இறகைத் தேடும் சிறகுகள் நூலில் 60கவிதைகள் மொழிப்பெயரக்கப்பட்டுள்ளது அத்துனையும் அற்புதமான கவிதைகள் புத்தக வடிவமைப்பும் சிறப்பாக உள்ளது விலை 100ரூபாய்தான்

புத்தகம் வேண்டுவோர் கவிஞரை தொடர்புக்கொள்ளலாம் அவர் தொடர்பு எண்8754879990

 

 

                                           


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்