ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழ் நடத்தும் சிறப்புச் சிறுகதைப் போட்டி: எழுத்தாளர்கள் / வாசகர்கள் பங்கேற்கலாம்

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியாகும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் சரித்திரங்கள், அவர்களது உபதேசங்கள் மற்றும் நமது சாஸ்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பல சிறுகதைகள் வெளியாகி வருகின்றன.

இந்த வகையில் சேவை, தியாகம், பக்தி, மனிதநேயம், தேசபக்தி, சமுதாயப் பொறுப்பு, சமய நல்லிணக்கம் போன்றவற்றை விளக்கும் சிறுகதைகளைப் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்கிறோம்.

சிறந்த சிந்தனைகள் எவ்வாறு நடைமுறையில் செயல்வடிவம் பெறுகின்றன என்பதைக் காட்டும் சிறுகதைகளை எழுதி அனுப்பிப் பரிசினைப் பெறுங்கள்.

உங்களது சிறுகதைகளை அனுப்பும்போது

* சாஸ்திரங்களின்  கருத்துகளையோ, மகான்களின் சம்பவங்களையோ கூறும்போது ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள்.

* எல்லோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

* ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் இருக்க வேண்டும்.

* கதைகளை தபாலிலோ, இ-மெயிலிலோ அனுப்பலாம்.

* இணையதளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவற்றை ஏற்க இயலாது.

* தேர்வாகாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.

* போட்டிக்கு அனுப்பப்பட்ட கதை முடிவு தெரியும்வரை வேறெந்தப் பத்திரிகைக்கும் அனுப்பப்படவில்லை என்ற உத்தரவாதம் தேவை.

* பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

* முடிவு வெளியாகும் வரை கடிதம், தொலைபேசி, இ-மெயில் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.

முடிவுகள் செப்டம்பர் மாதத்து ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியிடப்படும்.

 -ஆசிரியர்

கதைகளை அனுப்ப கடைசித் தேதி : 25.7.2014

முதல் பரிசு ரூ.10,000/-

இரண்டாம் பரிசு ரூ. 8,000/-

மூன்றாம் பரிசு ரூ. 6,000/-

5 ஊக்கப் பரிசுகள் ரூ. 2,000/- வீதம் ரூ. 10,000/-

 

அனுப்ப வேண்டிய முகவரி :

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்,

31, ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாலை,

மயிலாப்பூர்,

சென்னை - 600004.

இ-மெயில் : sriramakrishnavijayam@gmail.com

...........................................................................................

மெல்பனில்    கலை    இலக்கிய   விழா   2014

அவுஸ்திரேலியா தமிழ்    இலக்கிய  கலைச்சங்கத்தின்    வருடாந்த  தமிழ் எழுத்தாளர்   விழா இம்முறை கலை  -  இலக்கிய    விழாவாக நடத்தப்படவிருப்பதாக    சங்கத்தின்     செயற்குழு    அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம்  26  ஆம்  திகதி   (26-07-2014)    சனிக்கிழமை பிற்பகல்   2  மணிக்கு மெல்பனில்  St.Benedicts College மண்டபத்தில்     (Mountain  Highway ,  BORONIA , Victoria)         தொடங்கும்    கலை  - இலக்கிய விழா    இரவு  10   மணிவரையில்    நடைபெறும்.

பகல்   அமர்வில்   இலக்கிய கருத்தரங்கு மற்றும்    நூல்களின்    விமர்சன   அரங்கும்    மாலை  6    மணிக்கு    தொடங்கும்    நிகழ்வில்   இசை நிகழ்ச்சி    மற்றும்    நாட்டியநாடகம்    முதலான    பல்சுவை    நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

இவ்விழாவில்  மெல்பன்   -   சிட்னி   -    பேர்த்   -   பிரிஸ்பேர்ண்    ஆகிய நகரங்களிலிருந்து     எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.     பகல் பொழுதில் நடைபெறவுள்ள இலக்கிய கருத்தரங்கில் பார்வையாளர்களும்    கருத்துச்சொல்லி கலந்துரையாடத்தக்கதாக     நிகழ்ச்சி     ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா    தமிழ்    எழுத்தாளர்களின்    நூல்கள்    மற்றும்     இங்கு முன்பு    வெளியான தற்பொழுது     வெளியாகும்     இதழ்களின் கண்காட்சியும்     இடம்பெறும்.

இவ்விழாவில்    கலந்துகொண்டு    சிறப்பிக்குமாறு    அன்பர்கள்   -   கலைஞர்கள்   -   கவிஞர்கள்   -   படைப்பாளிகள்   -   ஊடகவியலாளர்கள்  -  தமிழ் ஆசிரியர்கள்    -   உயர்தர வகுப்பில்    தமிழையும்    ஒரு    பாடமாகப்பயிலும் தமிழ் மாணவர்களும் அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக    விபரங்களுக்கு:   திரு. ஸ்ரீநந்தகுமார்   -   செயலாளர்   அவுஸ்திரேலியா    தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.

தொலைபேசி:   04 15 40 5361

மின்னஞ்சல் atlas2001@live.com

..........................................................................................................................................................................................

25 ஆவது ஆண்டில் விளம்பரம் நடத்தும் உலகளாவிய போட்டி

....................................................................................

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சரி புத்தக நிறுவம் இணைந்து நடத்தும் இலக்கியப் போட்டி 2014