கௌரவம் !  

இயக்கம் : ராதா  மோகன்

திரைவிமர்சனம்:  கவிஞர் இரா .இரவி ! 
 

அபியும் நானும் ,மொழி போன்ற நல்ல திரைப்படங்களை இயக்கிய ராதா  மோகன் இயக்கத்தில் வந்துள்ள படம் கௌரவம் .தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் பாராட்டுக்கு  உரியவர் .தரமான படம் தந்து வருவதற்கு மிக்க நன்றி .இயக்குனர்  ராதா  மோகன் படம் என்றால் குடும்பத்துடன் தைரியமாக சென்றுப் பார்க்கலாம் .ஆபாசம் இருக்காது என்று உறுயாக நம்பலாம்

இன்றும் பல கிராமங்களில் தீண்டாமையும் ,இரட்டைக் குவளை முறை உள்ளது என்பதை காட்டி உள்ளார்கௌரவக் கொலைகள் இன்றும் பல கிராமங்களில் நடந்து வருவது உண்மை என்பதை நாளிதழ் செய்திகள் நாளும் நிருபித்து வருகின்றன .

டி .வெண்னூர் என்ற கிராமத்தை கடக்கும் இளைஞன் ஊரின்  பெயர்ப்பலகையை பார்த்து விட்டு உடன் படித்த நண்பன் சண்முகம் ஊர் என்பதால் சென்று பார்க்க உள்ளே நுழைகிறான் .அங்கு தீண்டாமை ,இரட்டைக்குவளை  முறை இருப்பதைக் காண்கிறான் .நண்பன்  சண்முகம் உயர்சாதி பெண்ணைக் காதலித்து ஊரை விட்டு ஓடிப் பொய் விட்டதாகச்  சொல்கிறார்கள் .

இளைஞன் சென்னைக்கு சென்று சக நண்பர்களிடம் சண்முகம் பற்றி விசாரிக்கிறான் .யாரும் தொடர்பு இல்லை என்று சொல்லவும் .நண்பன் ஒருவனுடன் திரும்பவும் சண்முகம்ஊருக்கு வந்து சண்முகம் பற்றி விசாரிக்கிறான்.

பசுபதி என்ற ஊர் பெரியவர் மகளை சண்முகம் காதலித்து உள்ளான் என்பதை அறிந்து பசுபதி வீட்டிற்கு சென்று பசுபதியிடமும் அவர் மகனிடமும் சண்முகம் பற்றி விசாரிக்கிறான்.கோபப்படுகிறார்கள் .ஓடிப் போய் விட்டார்கள்.என்று  முடித்துக் கொள்கின்றனர் .

காவலரிடம் ,ஊர் மக்களிடம் .பதிவு அலுவலகத்தில் விசாரிக்கிறான் .நாசர் மகள் வழக்கறிஞர் துணையுடன் நண்பன் பற்றி விசாரிக்கிறான் .  இவர்களை கிராமத்தை விட்டு   விரட்ட பெட்ரோல் குடு வீசி தீ வைக்கின்றனர் .

படம் தொடங்கியதில் இருந்தே சண்முகத்தை கொலை செய்து விட்டார்கள் போல என்ற சந்தேகம் வருவதால் ஈடுபாடு சற்று குறைகின்றது .கடைசியில் நாம் நினைத்தது போலவே 

சண்முகமும் ,அவனது காதலியும் கொலை செய்து புதைத்து உள்ளார்கள் என்ற உண்மையை வெளியே கொண்டு வர மிகப் பெரிய போராட்டம் நடத்துகின்றான் .சக நண்பர்கள் ,ஊடகங்கள் ,பொறியாளர்கள் எல்லோருக்கும் மின் அஞ்சல் அனுப்பி கிராமத்திற்கு வரவழைத்து .போராடுகின்றான் .

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனை காதலித்து ஊரை விட்டு தப்பிச் செல்லும் போது ( பசுபதி மகன் ) காதலியின் அண்ணன் இருவரையும் கடத்தி வந்து தங்கை முன் காதலனை அடிக்கிறான் .அவள் தடுக்கிறாள் .இவரைத்தான்  மணம் முடிப்பேன் என்று அவன் கரம் பிடிக்கிறாள் .உயர் சாதி வெறி பிடித்த அண்ணன் தங்கையின் கரம் வெட்டுகிறான் ,கோபத்தில் இருவரையும் வெட்டிக் கொல்கிறான் .இருவரையும் கிராமத்தில் வெளியே குழி தோண்டி புதைக்கிறான் .

ஆடிசம் பதித்த சிறுவன் பார்த்த காட்சியை ஓவியம் வரையும் ஆற்றல் உள்ளவன் .அவனது ஓவியத்தின் மூலமே இந்தக் கொலைகளைப் பற்றி அறிய முடிகின்றது  .படத்தின் தொடக்கத்தில் எழுத்து வரும்போது முழுவதும் ஓவியமாக வருவது இயக்குனர் நுட்பம் தெரிகின்றது 

உயர் சாதி ஆதிக்கம் ,சின்ன விசயங்களுக்காக பெரிதான சாதிக் கலவரம் நடக்கும் கிராமத்தை கண் முன் அப்படியே காட்டி இயக்குனர்  ராதா  மோகன்வெற்றி பெற்றுள்ளார் .

வசனம் விஜி மிக நன்றாக எழுதி உள்ளார் .இசை எஸ் .எஸ் .தமன் குறிப்பாக பின்னணி இசை மிக நன்று .பாடல்கள் நன்று .ஒளிப்பதிவு குளுமை .சண்முகத்தின் அப்பாக வருபவர் மிக நன்றாக நடித்து உள்ளார் ."சிறு வயதில் அவன் அம்மா இறந்து விட்டால் நான்தான் வளர்த்தேன் .அவனுக்கு அப்பா மட்டுமல்ல பால் மட்டும் கொடுக்காத அம்மாவும் நான்தான் .அவன் எங்காவது உயிரோடு வாழ்கிறான் என்பது தெரிந்தால் போதும் .என்று கண் கலங்கும் போது மிக நெகிழ்ச்சி ".

பிராகாஷ் ராஜ் சொந்தப் படத்தில் வில்லன் பசுபதியாக நடித்துள்ளார் ..பசுபதி தனக்குதானே சுட்டுத்  தற்கொலை செய்து கொள்கிறார் .கொலைகள்   செய்தவனுக்கு பசுபதி மகனுக்கு சிறை  தண்டனை வாங்கித் தருகிறான்  

கடைசியில் கொலைகளைக் கண்டுபிடித்த இளைஞனும் ,பெண் வழக்கறிஞரும் காதலித்து கரம் பிடிகின்றனர் .

கௌரவக்கொலைகள் ,தற்கொலைகள் வேண்டாம் என்பதை உணர்த்தும் மிக நல்ல படம் .மனித நேயம் கற்பிக்கும் படம் .தீண்டாமைக்கு எதிராகக் குரல் தந்துள்ள மிக நல்ல படம் .ஆபாசம் இல்லை ,அசிங்கம் இல்லை .,இரட்டை அர்த்த கொச்சை வசனங்கள் இல்லை .தரமான படம் .திரை அரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய படம் .காதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ள படம் .காதல் ஒன்றும் குற்றம் இல்லை என்று உணர்த்தும் படம் .

இயக்குனர் ராதா மோகன் .தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் வெற்றிக் கூட்டணியின் வெற்றிப்படம்.
 


vidhyasagar1976@gmail.com