பாகுபலி (திரை விமர்சனம்)

ஞா.ஆரணி
 


யூலை
10ஆம் திகதிஉலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானபடம் பாகுபலி. பழையகாலத்துஅரசனின் கதை இதுவாகும். 'பாகுபலி' என்றால் பலம் பொருந்தியகைகள் உடையவன் என்ற கருத்து. கதாநாயகன் குழந்தையாக இருந்தபோது அவரை ஒரு அரச பரம்பரைபெண் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறாள். குழந்தையை கையில் வைத்துக்கொண்டே அவர்களை துரத்தி வந்த போர்வீரர்களை கொல்கிறாள். ஆனால் அவர்களிடம் தப்புகிறவள் தண்ணீரில் தவறிவீழ்கின்றாள்.

குழந்தை காப்பாற்றப்பட்டு,வளர்ந்துபடத்தின் கதாநாயகன் ஆகிறான். அவன் வாழும் இடத்தருகே இருக்கும் ஒருமிகப்பெரியமலையில் ஏறிமறுபக்கத்தில் என்ன இருக்கிறது என அறிய விரும்பி, பெரிய நீர்வீழ்ச்சியுடன் கூடிய அந்தமலையில் ஏற பல முறை முயற்சிக்கிறான். மலையைத் தாண்டிவாழ்பவர்கள்தான் தன் வளர்ப்பு மகனை கொல்லவந்தனர் என அறிந்த வளர்ப்புத் தாய்க்குகதா-நாயகன் மலையில் ஏற முயல்வது பிடிக்கவில்லை.


கதாநாயகன் மலையில் எப்படி ஏறுவான்? மலையைத் தாண்டிஎன்ன இருக்கிறது? கதாநாயகனின் உண்மைப் பெற்றோர்கள் யார்? இதெல்லாம் படத்தைபார்த்தறியுங்கள். இனி பாகுபலியைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.


இந்திய சினிமா வரலாற்றின் அதிகூடியபணம் (
$40 மல்லியன் அமெரிக்கன் டொலர்) செலவழித்துதயாரித்தபடம் இது. இதற்குஏற்பபாகுபலியும் அமைகிறது. இப்படத்தின் கதை புதிதாக இல்லாவிட்டாலும், இப்படத்தின் தரம், பிரம்மாண்டமானகாட்சி அமைப்பு போன்ற விடயங்களில் பணம் செலவழித்தது தெரிகிறது. எனவே பார்க்கக் கூடியவர்கள் Theater இல் பார்த்தால் இக்காட்சிகளைமுழுதிறமையுடன் காணலாம், இரசிக்கலாம்.


படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப, பாகுபலியின் திரைப்ப
Poster ஒன்றும் Guiness book of world record  ஐ மிகப்பெரிய Posterக்கு பெற்றுள்ளது.


தெலுங்கு நடிகர்கள் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் வருகிறார்கள். ஆனால் இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் கதையின் ஒவ்வொரு பரம்பரைக்கு ஒருவராக வருகின்றனர். இம்மூவராக ரம்யாகிருஷ்ணன், அனுஷ்காமற்றும் தமண்ணா நடிக்கின்றனர். மூவரும் மிகதிறமான கதாபாத்திரங்களாக காட்சியளிக்கின்றனர்.


அழகிலும்,வீரத்திலும் சிறந்தபோராளிதான் தமண்ணாவின் கதாபாத்திரம். ரம்யாவின் கதாபாத்திரம் படையப்பாநீலாம்பரிக்குஎதிராகநிற்கக் கூடிய இராஜமாதா. அனுஷ்காவின் கதாபாத்திரத்தைபற்றிஎங்களக்குதெரியாது. ஆனால்படத்தைபார்த்தால் இவரும் மிக வீரமுடைய ராணி எனதெரிகிறது. இக்கதாபாத்திரத்தைபற்றி இரண்டாம் பாகம் படத்தில் விரிவாக கூறப்படும் எனதெரிகிறது.


இவ் அரச கதையை பிரமாண்டமான முறையில் படமாக்கியவிதமும் கதை கூறப்படுகிற விதமும் புதியது. பாகுபலி இந்தியாவின் அதிகூடியசெலவுடன் எடுக்கப்பட்டஒருதரமான, பிரமாண்டமானபடம் எனகனேடிய
CBC செய்தி நிறுவனம் உட்படஉலகம் எங்கும் புகழப்பட்டிருக்கிறது.


'பாகுபலி:
The beginning’ என்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆன 'பாகுபலி:  The conclusion’ 2016இல் வர இருக்கிறது.


உலகம் முழக்கதமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்கவைத்தபடம் பாகுலி எனபல்வேறு இணையத்தளங்கள் கூறுகின்றன. கதை எங்களுக்கு புதிதாக இல்லாவிட்டாலும் உலகிற்கு புதியது. பாகுபலிபடத்தால் உலகம் முழுக்க 'இந்தியசினிமாஎது?' எனக் கேட்டால் இனி சிலர் ஹிந்திப் படங்கள் என்று கூறுவதுடன் தமிழ் படங்களையும் உதாரணமாகக் கூறுவார்கள்.

 





 

asgnanam@gmail.com