தனிஒருவன் (திரை விமர்சனம்)

ஞா.ஆரணி


ஜெயம் ரவி நடித்த ஒரு வித்தியாசமான படம் தனிஒருவன் ஆகும். இது அவரது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் வெளிந்தது.
ஒரு பக்கத்தில் மித்திரனும் (ஜெயம் ரவி) அவரதுதோழர்களும்
IPS படித்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் இரவில் கள்ளர்களை தேடி கண்டுபிடித்து நகர் காவலர்களிடம் ஒப்படைக்கின்றனர். சின்னச் சின்னகளவுகளுக்கு பின்னால் பெரும் காரணங்கள் உள்ளன என உணர்ந்த மித்திரனுக்கு நூற்றுக்கணக்கான சிறுகளவுகளுக்கு பின்னால் இருக்கும் யாராவது ஒரு பெரியகள்ளனை (வில்லனை) தனதுதகுதிக்கு ஏற்ப கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என்ற ஆசை வருகிறது. இதை உணர்த்த அவரும் 'உன் எதிரியார் என்றுசொல் நீயார் என்று சொல்கிறேன்' என ஒரு தத்துவத்துடன் வாழ்கிறார்.


மறு பக்கத்தில் சித்தார்த் அபிமன்பு (அரவிந்சாமி) பதினைந்துவயதில் கொலை செய்ததற்கு சிறைக்கு சென்றவன் இப்பொழுது இந்தியாவின் சிகச்சிறந்த தொழில் அதிபரும் விஞ்ஞானியும் ஆவார். ஆனால் அவர் மருந்துகளை மக்களின் நலனிற்காக இல்லாமல் தனது பொருளாதார நன்மைக்காக தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்கிறார். அதனுடன் அவருக்குகீழ் மூன்றுதுறையில் மக்களிடம் பெயர் பெற்றவர்கள் உண்மையில் கெட்டவர்களாகவாழ்கின்றனர்.


கதாநாயகனுக்கு ஏற்றவில்லனும்,வில்லனுக்கு ஏற்ற கதாநாயகனும் ஆக மித்திரனும் சித்தார்த் அபிமன்யுவும் இருக்கின்றனர். இவ்வாறு ஒரு அரசியல் பல முள்ளபெரும் தொழிலதிபரும் வில்லனை எவ்வாறு தனி ஒரு வனாககதாநாயகன் கைதுசெய்வார்? இக்கேள்விக்கு படத்தைபார்த்து அறியுங்கள். இனிபடத்தின் கதையைப் பற்றிகொஞ்சம் பார்ப்போம்.


திருடன் - பொலிஸ் கதையாக இருந்தாலும் இக்கத சொல்லும் விதம் வேறு. வில்லனை பிடிப்பது ஒன்றைமட்டும் தனது வாழ்கை குறிக்கோளாக எடுக்கும்; கதாநாயகனும், கதாநாயகன் தன் வாழ்க்கையில் தலையிடும் சிறுதடங்கல் மட்டுமே என நினைக்கும் வில்லனும் இரு வித்தியாசமான குணங்களை காட்டும் கதாபாத்திரங்கள் ஆவர்.


மித்திரன் தன் குறிக்கோள் மீது கண்ணும் கருத்துமாக இது வெறியாகும் போதுதான் விபரீதமாகிறது. வில்லனைப் பிடிக்கதன்னையே இழக்கத் தயாரானவன் ஏன் மனச்சோர்வு அடைகின்றன்? பலகுறிக்கோள்கள் உடையவன் என்பதால் ;வில்லன் வாழ ஆசைப்படுகிறான். கதாநாயகனோ அமைதியை இழந்து வில்லனை நோக்கி வெறியுடன் இருக்கிறார். இது தவறு என்னும் உயிரைக்கொடுத்து வில்லனை பிடிப்பேன் என்று கூறாமல்,வில்லனை பிடித்து வாழ்க்கையில் முன்னேறுவேன் என கதாநாயகியின் அறிவுரையை கேட்டபின் மித்திரன் வெற்றி பெறுகிறாரா என படத்தைப் பார்த்துஅறியுங்கள்.


அடிதடி சண்டை என்று இல்லாமல் இருவரும் புத்தியை பயன்படுத்தி தனி ஒருவன் தொழில் நுட்பம் மூலம் சண்டைபிடிக்கின்றனர். இப்படத்தில் வில்லன், கதாநாயகனையே அவனுக்குத் தெரியாமல் தனக்கு வேவுபார்க்கவைப்பது ஒருசிறப்பு முயற்சியாகும். கதாநாயகன் இதைக் கண்டுபிடிக்கபடும் கஷ்டம்தான் இப்படத்தில் கதாநாயகன் போராடும் கண்ணுக்குத் தெரியாத எதிரி.


எனவே, வித்தியாசமான கதாபாத்திரங்கள், படிப்பிடிப்புடன் 'தனிஒருவன்' ஒரு வித்தியாசமான படமா இருக்கிறது. இது எல்லோரும் பார்க்க கூடியபடம் ஆகும்.

 


 


 

asgnanam@gmail.com