கோபிகிருஷ்ணன்:

பெயர்: கோபிகிருஷ்ணன்
பிறந்த இடம்: மதுரை

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

நாவல்:
  • உள்ளிருந்து சில குரல்கள்
  • இடாகினி பேய்களும், நடைபிணமும் சில உதிரி இடை தரகர்களும்

சிறுகதைத் தொகுப்பு:

  • தூயோன்

பிற நூல்கள்:

  • ஒவ்வாத உணர்வுகள்
  • மானிட வாழ்வு தரும் ஆனந்தம்

இவர் பற்றி:

  • நவீன சிறுகதை உலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். உளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி 'உள்ளிருந்து சில குரல்கள்' என்ற நாவலை எழுதியிருக்கிறார். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலஹீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003ஆம் ஆண்டு காலமானார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).