அரங்கநாதன்.மா:

பெயர்: மா. அரங்கநாதன்
பிறந்த இடம்: திருப்பதிசாரம், கன்னியாகுமரி மாவட்டம்

படைப்பாற்றல்:  சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • பறளியாற்று மாந்தர்
  • காளியூட்டு

சிறுகதைத் தொகுப்பு:

  • காடன் மலை
  • வீடுபேறு
  • ஞானக்கூத்து

உரைநடைக் கவிதைத் தொகுப்பு:

  • பொருளின் பொருள் கவிதை - 1983

விருதுகள்:

  • தமிழக அரசு நாவல் பரிசு
  • கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு
  • திருப்பூர் தமிழ்ச் சங்கப்பரிசு

இவர் பற்றி:

  • மிக நுண்ணிய அவதானிப்புக்களை தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் ஆரம்பத்திலேயே எழுதியவர். 'முன்றில்' என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இது ஏறத்தாழ 20 இதழ்கள் வெளியாகின. தமிழில் ஆழ்ந்த புலமையும், தீவிர தேடுதலும் கொண்ட எழுத்தாளர் இவர். 1950 களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளார். கவிஞர் ரவிசுப்ரமணியன் என்பவர் இவர் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். 'மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்' என்பது அந்த ஆவணப்படத்தின் பெயர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).