வெங்கட்ராம்.எம். வி:

பெயர்: எம்.வி.வெங்கட்ராம்
பிறந்த இடம்: கும்பகோணம்
(18.05.1920 – 14.01.2000)
தந்தை, தாய் பெயர்கள்: வீரய்யர் - சீதை அம்மாள்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:


சிறுகதை தொகுப்புகள்:

  • மாளிகை வாசம்
  • உறங்காத கண்கள்
  • மோகினி
  • குயிலி
  • இனி புதிதாய்
  • நானும் உன்னோடு
  • அகலிகை முதலிய அழகிகள்
  • முத்துக்கள் பத்து
  • பனிமுடி மீது கண்ணகி
  • எம்.வி.வெங்கட்ராம் கதைகள் - முழுத்தொகுப்பு

நாவல்கள்:

  • காதுகள் - 1993
  • நித்தியகன்னி
  • இருட்டு
  • உயிரின் யாத்திரை
  • அரும்பு
  • ஒரு பெண் போராடுகிறாள்
  • வேள்வித் தீ

பிறபடைப்புக்கள்:

  • நாட்டுக்கு உழைத்த நல்லவர்

விருதுகள்:

  • காதுகள் - சாகித்திய அகாதமி விருது - 1993
  • தமிழக அரசு விருது - எம்.வி. வெங்கட்ராம் கதைகள்
  • சித்த சூரி ரத்ன விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • சாந்தோம் விருது
  • புதுமைப்பித்தன் சாதனை விருது

இவர் பற்றி:

  • இவரது முதல் சிறுகதை 'சிட்டுக்குருவி' இவரது பதினாறு வயதில் மணிக்கொடியில் வெளியானது. இவர் பொருளியலில் இளமாணிப் பட்டம் பெற்றவர். 1941 – 1946 காலப்பகுதியில் இவரது படைப்புக்கள் கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி முதலான இதழ்களில் வெளிவந்தன. 1965 – 1970 காலகட்டத்தில் முழுநேர எழுத்தாளர் ஆனார். பல அரிய நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். 1948 இல் 'தேனி' என்ற இதழை நடத்தினார். வேள்வித்தீ என்ற இவரது நாவல் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள். மனைவி பெயர் ருக்மணி அம்மாள். எம்.வி.வெங்கட்ராம் 14.01.2000 அன்று காலமானார்.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).