சிவஞானம்.ம.பொ:

பெயர்: பொன்னுச்சாமி சிவஞானம்
பிறந்த இடம்: மயிலாப்பூர் -
1906

படைப்புகளில் சில: 
  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
  • கட்டபொம்மன் கதை
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை வரலாறு
  • விடுதலைப் போராட்டத்தில் தமிழ் வளர்ந்த வரலாறு
  • விடுதலைப் போரில் தமிழகம்

சுயசரிதை:

  • எனது போராட்டம்

விருதுகள்:

  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு – சாகித்திய அகாடமி விருது - 1966
  • 'சிலம்புச் செல்வர்' விருது – ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது.
  • சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் - டாக்டர் பட்டம் வழங்கின.
  • பேரவைச் செல்வர் என்ற பட்டம் - மதுரைப் பல்கலைக்கழகம்
  • பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு

இவர்பற்றி:

  • இவர் இந்தியாவின் சிறந்த தமிழறிஞர். ம.பொ.சி என்று எல்லோராலும் பேசப்படுபவர். மயிலாப்பூர் பொன்னுச்சாமி சிவஞானம் என்பதே பின்;னாளில் ம.பொ.சி என்றாயிற்று. சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என்றும் அழைக்கப்பட்டார். இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு நின்றுபோனது. இவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம் சென்றார். காங்கிரஸ் இயக்கத்தின் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினார். தமிழகத்தின் தலைநகராகச் சென்னையை இருத்திய பொருமைக்கு உரியவர். செங்கோல் என்ற வார இதழை நடத்திவந்தார்.