.முத்துக்கிருஷ்ணன்

பிறந்தநாள்: 17.03.1973
பிறந்த இடம்:
மங்கல்ரேவு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
வதிவிடம்:
மதுரை,தமிழ்நாடு
தொடர்புகளுக்கு:
முகவரி:
நிலா முற்றம்,
3/351 கார்த்திகா நகர், தனக்கன்குளம், திருநகர், மதுரை, தமிழ்நாடு, இந்தியா 625006
E.mail:muthusmail@gmail.com

படைப்பாற்றல்: கட்டுரை, ஆவணப்படம், புகைப்படம்

படைப்புக்கள்:

கவிதை
  • சாவேஸ் (2006)
  • ஒளிராத இந்தியா (2007)
  • மலத்தில் தோய்த மானிடம் (2008)
  • நஞ்சாகும் நீதி (2011)

மொழியாக்கம்

  • குரலின் வலிமை (2005)
  • அப்சலை தூக்கிலிடாதே (2006)
  • அமைதிக்காகப் போராடுவோம் (2008)
  • குஜராத் 2002 - இனப்படுகொலை (2008)
  • தோழர்களுடன் ஒரு பயணம் (2010)

இவர் பற்றி:

  • எழுத்தாளர் அ.முத்துக்கிருஷணன் தமிழ் சூழலில் இயங்கி வரும் இளைஞர்களில் மிகவும் நம்பிக்கை அளிக்க க்கூடியவர்.

  • விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருபவர்.

  • தன் எழுத்துக்களுக்காக தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக பயணித்தும் வருபவர். குஜராத்இ ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரம் என இந்தியா வெங்கும் மாதத்தின் பாதி நாட்கள் பயணத்தில் இருப்பவர்.

  • கூடங்குளம், ஜைதாப்பூர், தாராபூர், கல்பாக்கம், கைக்கா என அணு உலைகள் இருக்கும் இடங்களுக்கு களப்பணிக்காக செல்பவர்.

  • உயிர்மை, தமிழினி, ஆனந்த விகடன், ஜீனியர் விகடன், இந்தியாடு டே, தலித் முரசு, புதிய பார்வ, புது எழுத்து என தமிழில் வெளிவரும் பல பத்திரிக்கைகளில் இவரது பதிவுகளை நீங்கள் கானலாம். விஜய் டிவி யின் நியா நானா நிகழ்ச்சியில் தொடர்ந்து பல அழுத்தமான உரையாடல்களை நிகழ்த்தி நம்மில் பலருக்கு இவர் அறிமுகம் ஆனவர்.

  • மிக அபூர்வமான பல தகவல்களை பார்வைகளை தமிழக வாசகர்களுக்கு வழங்கி வருபவர். தன் எழுத்தின் ஒரு பகுதியா முக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கமும் செய்துள்ளார். குஜராத இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழல் நமக்கு வழங்கியவர். அத்துடன் அப்சலை தூக்கிலிடாதே, தோழர்களுடன் ஒரு பயணம், அமைதிக்காக போராடுவோம், மதவெறி இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்திய, மலத்தில் தோய்ந்த மானுடம் இவரது இரு கட்டுரை தொகுதிகள்.

  • இவர் மேற்கொண்ட பயணங்களில் மிக முக்கிய பயணம் சமீபத்தில் பாலஸ்தீனத்தின் காசாவுக்கு சென்றதே. காசாவுக்கு செல்வது என்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல என்பதை நாம் அறிவோம். இஸ்ரேலின் தொடர் குண்டு வெடிப்புகளுக்கு தினமும் மக்கள் பலியாகும் பூமிதான் காசா.

  • 10000 கிமி தரை வழியாக பயணித்து காசாவுக்கு சென்ற குழுவில் பயணித்த ஒரே தமிழர் இப்பொழுது நம்மிடம்