நிழற்படம் இல்லை

முத்துசாமி.ந:

பெயர்: ந.முத்துசாமி
பிறந்த இடம்: தஞ்சை மாவட்டம் (1936)

 

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • நீர்மை

நாடகங்கள்:

  • அப்பாவும் பிள்ளையும்
  • நாற்காலிக்காரர்கள்
  • காலம் காலமாக
  • சுவரொட்டிகள்
  • படுகளம்

கட்டுரைத் தொகுப்பு:

  • அன்று பூட்டியவண்டி ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்)

இவர் பற்றி:

  • தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ந.முத்துசாமி. இதற்காக இவர் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். இவரது ' கூத்துப்பட்டறை' என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. நவீன தமிழ் நாடகங்களை உலகமெங்கும் நடத்திக் காட்டிய பெருமை ந.முத்துசாமிக்கு உண்டு. 'கசடதபற',  'நடை' போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தனது 'நாற்காலிக்காரர்' என்ற நாடகத்தின் மூலம் நவீனத் தமிழ் நாடகத்தின் தோற்றத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராகக் கருதப்படும் ந.முத்துசாமி அதிகமான சிறுகதைகள் எழுதியவர் அல்ல, சென்னை வாழ்க்கையில் தனது ஐம்பது ஆண்டுக்கால எழுத்துப் பணியில் தனது முழு நேரத்தையும் நாடகம் எழுதுதல்,  தான் தொடங்கிய கூத்துப்பட்டறை என்ற அரங்கியல் நிறுவனத்தை வளர்த்தெடுத்தல்,  அதன் சார்பில் நாடகங்களைத் தயாரித்து மேடை ஏற்றுதல் என்பதில் முழுக்கவனம் செலுத்திய முத்துசாமியின் சிறுகதைகள், அவரது கிராமம் சார்ந்த இளமைக்காலத்தின் பதிவுகளாகவே உள்ளன.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).