மோகன்.சி:

பெயர்: சி.மோகன்

படைப்பாற்றல்:  சிறுகதை, விமர்சனம், கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • ரகசிய வேட்கை

கவிதைத் தொகுப்பு:

  • தண்ணீர் சிற்பம்

கட்டுரைத் தொகுப்பு:

  • நடைவழிக் குறிப்புகள்
  • காலம் கலை கலைஞன்

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • கதையின் திசைகள்
  • நவீன உலகச் சிறுகதைகள்

இவர் பற்றி:

  • சி. மேகன் சிறந்த சிறுகதை எழுத்தாளர். விழிகள் என்ற பத்திரிகையை நடத்தினார். க்‌ரியா பதிப்பகத்தில் இவர் பணியாற்றிய போது உலக இலக்கியங்கள் பல தமிழில் வெளிவர காரணமாக இருந்துள்ளார். சிறந்த மொ‌ழி பெயர்ப்பாளர். ஜெர்மன் எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்காவின் புகழபெற்ற தீர்ப்பு கதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வயல் என்ற தனது பதிப்பகத்தின் மூலம் தி. ஜானகிராமனின் கதைகைளை புத்தகமாக கொண்டுவந்துள்ளார். சிறந்த பதிப்பகத்துக்காக ஜெர்மனியில் வழங்கப்படும் விருதை இவர் பெற்றிருப்பது தனிச்சிறப்பு. நுண் கலைகள் மீதான இவரது விமர்சனத்துடன் கூடிய அணுகுமுறை குறிப்பிடத்தகுந்தது. நுண் கலைகளை பிரதானப்படுத்தி புனைகளம் என்ற புத்தகத்தை தொடர்ந்து கொண்டு வருகிறார். மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற ஜெ ஜெ சில குறிப்புகள் நாவலை எடிட் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பா.சிங்காரத்தின் படைப்புக்களைத் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெறச்செய்ததில்இ ஜி.நாகராஜன் படைப்புகளைத் தொகுத்ததில் இவரது பங்கு முக்கியமானது. ஆறுவது சினம் என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் சினிமாத் துறைக்குள் கால்பதித்துள்ளார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).